முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானத்தில் ஜெல் - திரவங்களை எடுத்து செல்ல தடை

வெள்ளிக்கிழமை, 7 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன் பிப்,8 - ரஷ்யாவுக்கு இயக்கப்படும் விமானங்களில் டூத் பேஸ்ட் குண்டை வைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் வகுத்துள்ளனர். என்ற ரகசிய தகவல் கசிந்ததையடுத்து விமானங்களில் ஜெல் மற்றும் திரவங்களை எடுத்து செல்லகூடாது என்று அமெரிக்கா தடை விதித்துள்ளது. ரஷ்யாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. சோச்சி என்ற இடத்தில் நடைபெறும் இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பயங்கர வாத அமைப்புகள் சில இந்த ஒலிம்பிக் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சில கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு இந்த அமைப்புகள் வற்புறுத்தி வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவுக்கு செல்லும் விமானங்களில் டூத் பேஸ்ட குண்டை வைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் வகுத்துள்ளனர் என்ற திடுக்கிடும் தகவல் அமெரிக்க உளவுப்பிரிவக்கு கிடைத்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் அமெரிக்க உளவுப்பிரிவு தகவல் அனுப்பியுள்ளது. எந்த விமானத்தில் டூத் பேஸ்ட் குண்டு வைக்கப்படும் என்று அமெரிக்கஉளவுத்துறை துல்லியமாக குறிப்பிட வில்லை. இதனால் பீதி அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் இருந்து ரஷ்ய தலைநகரான மாஸ்கோவுக்கு டெல்டா ஏர்லைன்ஸ் என்ற அமெரிக்க விமான சேவை மட்டுமே உள்ளது. ஆனால் அதேநேரத்தில் அமெரிக்காவில் இருந்து ரஷ்யாவுக்கு ஏரோபிளாட், டிரான்ஷ் இரோ ஆகிய ரஷ்ய சேவைகள் உள்ளன. டூத் பேஸ்ட டியுப்களில் பற்பசைக்கு பதிலாக சில ரசாயன பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும். நேரடியாகவும், ரிமோட் கண்ட்ரோல் மூலமாகவும் இதை இயக்கி வெடிக்கவைக்க முடியும் என்று கூறப்படுகிறது. அமெரிக்கா விடுத்துள்ளஎச்சரிக்கையை அடுத்து ரஷ்யாவுக்கு செல்லும் விமானங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே இயக்கப்படும் விமானங்களில் ஜெல், திரவம் பவுடர் போன்றவற்றை எடுத்து செல்ல கூடாது என்று அமெரிக்கா தடைவிதித்துள்ளது.

மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இது அமலில் இருக்கும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்