முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அர்ஜென்டினாவில் பேருந்து மீது லாரி மோதி 18 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 9 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

பியூனஸ் அயர்ஸ், பிப். 10 - அர்ஜென்டினாவில் பேருந்து மீது லாரி மோதி வெடித்து தீப்பற்றியதில் 18 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். 

அர்ஜென்டினாவில் மெண்டோஸா மாகாணத்தில் பியூனஸ் அயர்சையும், சாண்டியா கோவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக் கிழமை இவ்விபத்து நிகழ்ந்தது. 

எதிர் திசையில் வழி மாறி வந்த லாரி பேருந்து மீதி மோதியது. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் வெடித்து தீப்பற்றின. இதில் லாரி மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் உள்பட 18 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 

தகவலறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பலத்த காயமடைந்த 15 பேரை தீயணைப்பு படையினர் மீட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்