முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர் பங்கீடு குறித்து நேபாளத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை -சல்மான் குர்ஷீத் தகவல்

வியாழக்கிழமை, 26 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மே.- 25 - நேபாளத்துடன் நீர் பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வடகே இமயமலைப்பகுதியில் நேபாளம் இருக்கிறது. இமயமலையில் உற்பத்தியாகும் நதிகள் நேபாளத்தின் வழியாக இந்திய எல்லைக்குள் வருகிறது. நேபாளத்தில் நதிநீரை பயன்படுத்த இடம் இல்லை. மேலும் நதிகள் இயற்கையாக ஓடி பாயும் இடங்களெல்லாம் எந்த நாட்டில் உள்ளதோ அந்த நாட்டிற்குதான் அந்த நதிகள் சொந்தம். நேபாளத்தின் வழியாக ஓடி வந்தாலும் இந்தியாவில் அந்த நதிகள் பாயுவதால் பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும் இறையாண்மையை கருத்தில்கொண்டு நேபாளத்தின் சம்மதத்துடன்தான் நதிநீர் பயன்படுத்தப்பட்டுப்வருகிறது. நேபாளத்தில் பல அணைகளை இந்தியா கட்டி அணை நீரை பயன்படுத்தி வருகிறது. நேபாளத்தில் கோசி அணையையும் இந்தியாதான் கட்டியது. பெரும் வெள்ளப்பெருக்கால் அந்த அணையில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதை பழுதுபார்ப்பது மற்றும் சில நதிகள் பிரச்சினை தொடர்பாக நேபாளத்துடன் பேசி தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நேபாளத்தில் கடந்த 2 ஆண்டுகளாக அரசியல் ஸ்திரமற்றநிலை நீடித்து வருவதால் அந்தநாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை. தற்போது நேபாளத்துடன் நதிநீர் பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று புதுடெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். மழை காலத்தில் நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பீகார் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இந்த பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்வுகாண இன்னும் ஓரீரு நாட்களில் நேபாள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அமைச்சர் சல்மான் குர்ஷீத் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்