முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன் 15ம் தேதிக்கு முன்னதாக பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை

வியாழக்கிழமை, 26 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.27 - ஜூன் 15ம் தேதிக்கு முன்னதாக பள்ளிகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது. நடைமுறையில் இருந்த ஸ்டேட் போர்டு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஒரியண்டல் உள்ளிட்ட கல்வி முறைகளை ஒருங்கிணைத்து சமச்சீர் கல்வி முறையை கடந்த ஆண்டு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில் முதல் கட்டமாக 1​ம் வகுப்பு முதல் 6​ம் வகுப்புக்கு வரை மட்டும் சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வரும் கல்வி ஆண்டான 2011-2012-ல் எஸ்.எஸ்.எல்.சி.வரை உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படும் என தி.மு.க. அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்  சமச்சீர் கல்வி தரமானதாக இல்லை என்றும் எனவே இந்த ஆண்டு பழைய பாட திட்டங்களை தொடரலாம் என்றும் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. பாட புத்தகங்களை தயாரிக்க கால அவகாசம் வேண்டும் என்பதால் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளை ஜூன் 15-ந்தேதி திறக்கலாம் என்றும் அரசு தெரிவித்திருந்தது.  

இந்த நிலையில் ஒரு சில மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தங்களுக்கு எந்தவித உத்தரவும் வரவில்லை என்று கூறி ஜூன் 1-ந்தேதி பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகளில் இறங்கி உள்ளது. இதையறிந்த மெட்ரிக் ஆய்வாளர், முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து மெட்ரிக்குலேஷன் மற்றும் சுயநிதி பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். அதில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 15-ந்தேதிதான் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அரசு அறிவிப்புக்கு முன்பு விதி மீறி திறக்கப்படும் பள்ளிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் பெரும்பாலான மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், 10​ம் வகுப்பு, பிளஸ்​2 மாணவ​மாணவிகளுக்கு மட்டும் சிறப்பு வகுப்பு என்ற பெயரில் ஜூன் 1-ந்தேதி முதல் பாடம் நடத்த மாணவ​மாணவிகளை பள்ளிகளுக்கு வருமாறு அழைத்துள்ளது. கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு, பிளஸ்​2 படித்த மாணவ​மாணவிகளிடம் இருந்து பாடப் புத்தகங்களை கேட்டு வாங்கி கொண்டு வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்