முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயக்குமார்-தனபால் வேட்பு மனுதாக்கல்

வியாழக்கிழமை, 26 மே 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, மே.27 - தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கியது. இதில் சபாநாயகர் வேட்பாளரான ஜெயக்குமார் வேட்பு மனுதாக்கல் செய்தார். இவர் போட்டியின்றி இன்று சபாநாயராக தேர்வு செய்படுவார் என்று தெரிகிறது.

இதுகுறித்து அரசு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழக புதிய சபாநாயகர் பதவிக்கு ஜெயக்குமார், துணை சபாநாயகர் பதவிக்கு தனபால் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். அவர்கள் நேற்று காலை கோட்டைக்கு சென்று சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீனிடம் பகல் 11.50 மணிக்கு மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்களை முதல்​ அமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்து இருந்தார். நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழி மொழிந்திருந்தார். 

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், முனு சாமி, சண்முகவேலு, வைத்திலிங்கம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கருப்பசாமி, பழனியப்பன், சி.வி. சண்முகம், செல்லூர் ராஜு, பச்சைமால், பழனிச் சாமி, சண்முகநாதன், கே.வி. ராமலிங்கம், வேலுமணி, சின்னையா, எம்.சி.சம்பத், தங்கமணி, செந்தமிழன், கோகுலஇந்திரா, செல்வி ராமஜெயம், சுப்பிரமணியன், செந்தில்பாலாஜி, ஜெயபால், இசக்கிசுப்பையா, புத்தி சந்திரன், செல்ல பாண்டியன், விஜய், சிவபதி மற்றும் கொறடா மோகன், திருச்சி மனோகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் சட்டசபை செயலாளர் ஜாமலுதீன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். 

அவர் கூறியதாவது:-​

தமிழக சட்டமன்ற சபாநாயகர் பதவிக்கு மனுதாக்கல் இன்று கடைசி நாள். சபாநாயகர் பதவிக்கு ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெயக்குமாரும், துணை சபாநாயகர் பதவிக்கு ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ. தனபாலும் மனுதாக்கல் செய்துள்ளனர். 2 பேரின் மனுக்களையும் முதல்​ அமைச்சர் முன்மொழிந்துள்ளார். நிதி அமைச்சர் வழிமொழிந்துள்ளார். இந்த 2 பேர் மட்டுமே மனுதாக்கல் செய்துள்ளனர். நாளை காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடும். இதில் தற்காலிக சபாநாயகர், புதிய சபாநாயகர் ஜெயக்குமாரை முறைப்படி தேர்ந்தெடுப்பார். பின்னர் அவர் துணை சபாநாயகரை தேர்வு செய்வார். 

இவ்வாறு அவர் கூறினார். 

ஜெயக்குமார், தனபால் தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. சட்டசபையில் அ.தி.மு.க.வுக்கு தனிப்பெரும்பான்மை உள்ளது. எனவே ஜெயக்குமார் சபாநாயகராகவும், தனபால் துணை சபாநாயகராகவும் சட்டசபையில் நாளை ஏகமனதாக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். புதிய சபாநாயகர் ஜெயக்குமாரை அவை முன்னவர் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் ஆகியோர் சட்டசபை சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைப்பார்கள். அதை தொடர்ந்து முதல்​ அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சட்டமன்ற கட்சி தலைவர்கள் வாழ்த்தி பேசுவார்கள். இறுதியில் சபாநாயகர் ஏற்புரையாற்றுவார். இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்