முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயகாந்த்துடன் சரத்குமார் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 27 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.27 -  சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்தை நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பு 40 நிமிடம் nullநடைபெற்றது. இதையடுத்து வெளியே வந்த சரத்குமார், நிருபர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி:- விஜயகாந்தை சந்தித்ததன் நோக்கம் என்ன?

பதில்:- இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. நாங்கள் ஒரே கூட்டணியில் உள்ளோம்.

கேள்வி:- ஆட்சி மாற்றம் ஏற்படும்போது சினிமா தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்சினை எழுகிறதே?

பதில்:- அவர்கள் தேர்தல் வரும் என தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கு பிறகு பிரச்னை தீர்ந்து விடும்.

கேள்வி:- நடிகர் சங்கத்தில் மாற்றம் உண்டா?

பதில்:- நடிகர் சங்கத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அதில் அரசியல் தலையீடு இல்லை. அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.

கேள்வி:- நடிகர் சங்க தேர்தல் எப்போது?

பதில்:- அடுத்த ஆண்டு வரும்.

கேள்வி:- சமச்சீர் கல்வி பற்றி?

பதில்:- அதற்கான அறிக்கை வெளியிட உள்ளோம்.

இவ்வாறு சரத்குமார் கூறினார்.  

இந்த சந்திப்பின்போது நடிகை விஜயகுமார், பசிசத்யா, நளினி, பாத்திமாபாபு ஆகியோர் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்