முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன்.1 முதல் ரேசன் கடைகளில் 20 கிலோ இலவச அரிசி

வெள்ளிக்கிழமை, 27 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.27 - தமிழகத்தில் வருகின்ற ஜூன்.1 தேதிமுதல் அனைத்து ரேசன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உறுதியளித்தார்.இதுகுறித்து அரசு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

நேற்று சென்னையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழகத்தில் 1.6.11 முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்குவது குறித்த விரிவான ஆலோசனை கூட்டம் உணவுத்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுரையின்படி போலி குடும்ப அட்டைகளை கண்டறிந்து உடன் களைவது, அரிசி கடத்தலை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது போன்ற அனைத்து பணிகளையும் அலுவலர்கள் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு எந்தவித குறைபாடுகளும் இன்றி சிறப்பாக செயல்பட வேண்டு என கூறினார். மேலும், புதிய குடும்ப அட்டைகள் காலதாமதம் இன்றி வழங்க நடவடிக்கை எடுத்திடவும், எடைகுறைவு இல்லாமல் பொருட்கள் வழங்கிடவும், புதிய குடும்ப அட்டைகள் காலதாமதமின்றி அச்சடித்தல் போன்ற பணிகளை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் எனவும் உணவுத்துறை அமைச்சர் அனைத்து அலுவலர்களையும் அறிவுத்தினார்கள்.

இக்கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை (பொ) வி.கே.ஜெயக்கொடி, ஆணையர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர்  பாதுகாப்புத்துறை, கா.பாலச்சந்திரன், நிர்வாக இயக்குனர், நுகர்பொருள் வாணிக்கழகம் எம்.வீரசண்முகமணி மற்றும் உணவுத்துறை உயர் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், இணைப்பதிவாளர்கள், மாவட்ட வழங்கல் அலுவலர்கள், உதவி ஆணையர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்