முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்பிரிக்க யூனியன் சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் பாராட்டு

வெள்ளிக்கிழமை, 27 மே 2011      இந்தியா
Image Unavailable

 

அட்டீஸ் அபாபா,மே.27 - ஆப்பிரிக்க நாடுகளிடையே அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டுவதில் ஆப்பிரிக்க யூனியன் சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டினார். எத்தியோப்பியா, தான்சானியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் பிரதமர் மன்மோகன் சிங் 6 நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளார். எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அட்டீஷ் அபாபாவில் நடைபெற்று இந்திய-ஆப்பிரிக்க யூனியன் உச்சி மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்துகொண்டார். எத்தியோப்பியா பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் மன்மோகன் சிங் நேற்று நீண்ட உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் ஆப்பிரிக்க கண்டத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டுவதில் ஆப்பிரிக்க யூனியன் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறது என்றார். 

ஆப்பிரிக்க மக்கள் தங்களுடைய தலைவதியையும் வளர்ச்சியையும் சுயமாக நிர்ணயித்துக்கொள்ள உரிமை உண்டு. இதில் யாரும் தலையிட முடியாது. தலையிடவும் கூடாது. ஆப்பிரிக்க நாடுகளில் சர்வதேச நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபை விதிமுறைகளின்படி இருக்க வேண்டும். காற்றின் திசை மாறி மேற்கு ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளை நோக்கி வீச ஆரம்பித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி கிடைக்க எத்தியோப்பியா தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதை வரவேற்கிறேன். இந்தியாவிலும் எத்தியோப்பியாவிலும் பலதரப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். நாம் ஜனநாயகத்திலும் சுதந்திரத்திலும் நம்பிக்கை வைத்துள்ளோம். அதேமாதிரி சர்வதேச நிர்வாகத்திலும் இது அடிப்படையாக இருக்க வேண்டும். இந்துமகாசமுத்திர பகுதியில் கடல் கொள்ளையை தடுத்து நிறுத்த எத்தியோப்பியாவுடனும் இதர ஆப்பிரிக்க நாடுகளுடனும் இணைந்து செயல்பட இந்தியா எப்போதும் தயாராக இருக்கிறது. இந்துமகாசமுத்திரமானது இந்தியாவுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஒரு இணையாக இருக்க வேண்டும். இதன்மூலம் சர்வதேச வர்த்தம் நடைபெற வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்