முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடைசிவரை போராடி தோற்றோம் - கேப்டன் காம்பீர்

வெள்ளிக்கிழமை, 27 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, மே. 27 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் மும்பையில் நடைபெ ற்ற இறுதிச் சுற்றுக்கான தகுதிப் போட்டியில் மும்பை அணியிடம் கடைசி வரை போராடி தோற்றோம் என்று கொல்கத்தா அணியின் கேப்டனான கெளதம் காம்பீர் தெரிவித்தார். 

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மும்பையில் நடைபெற்ற பிளே ஆப் எலிமினேசன் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தோற்கடித்தது. 

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைட ர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன் எடுத்தது. டென் டஸ்சாட்டே அதிகபட்சமாக 49 பந்தில் 70 ரன்னும் (8 பவுண்டரி, 3 சிக்சர்) யூசுப் பதான் 24 பந்தில் 28 ரன்னும் எடுத்தனர். முனாப் படேல் 3 விக்கெட்கைப்பற்றினார். 

பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 4 பந்து மீதமிருக்கையில், 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்தது. தொடக்க வீரர் பிளிஜ்சார்டு 30 பந்தில் 51 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்), டெண்டுல்கர் 28 பந்தில் 36 ரன்னும் (6 பவுண்டரி), பிராங்ளின் 25 பந்தில் 29 ரன்னும் எடுத்தனர். முனாப் படேல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிச் சுற்றுக் கான தகுதிச் சுற்றுப் போட்டிக்கு தகுதி பெற்றது. கொல்கத்தா அணி இந்தத் தோல்வியால் போட்டியில் இருந்து வெளியேறியது. 

இந்தத் தோல்வி குறித்து கொல்கத்தா அணிக் கேப்டன் காம்பீர் கூறிய தாவது - எங்கள் அணி திறமை வாய்ந்தது.  கடைசி வரை போராடி யே நாங்கள் தோற்றோம். கடைசி ஓவரில் தான் மும்பை வெற்றி பெ ற்றது. 

கடந்த 3 ஐ.பி.எல். போட்டியுடன் ஒப்பிடும் போது, இந்த ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணி முன்னேற்றம் அடைந்துள்ளது. இதற் காக எனது வீரர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். 

முதல் 5 ஓவரில் நாங்கள் 4 விக்கெட்டை இழந்து விட்டோம். இது தான் திருப்பு முனையாகும். தொடக்கத்தில் விக்கெட்டுகள் விழுந்து விட்டதால் மிகப் பெரிய ஸ்கோரைக் குவிக்க முடியவில்லை. எங்களது பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. 

இந்தப் போட்டித் தொடரில் மனோஜ் திவாரியின் பேட்டிங்கும், இக் பால் அப்துல்லாவின் பந்து வீச்சும் சிறப்பாக இருந்தது. அப்துல்லா முதல் 6 ஓவரை எப்போதுமே சிறப்பாக வீசுவார். அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. 

எல். பாலாஜியின் பந்து வீச்சு குறித்தும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு ஆட்டத்தில் அவருக்கு மோசமாக (மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் கடைசி ஓவரில் 23 ரன் கொடுத்தார்) அமைந்தது. அவர் ஒரு திறமை வாய்ந்த பெளலர் தான். 

கொல்கத்தா அணிக்கு கேப்டன் பொறுப்பேற்றது எனது அதிர்ஷ்ட மே. ஒரு சிறந்த அணியில் தான் சிறந்த கேப்டன் உருவாக முடியும். திறமையான வீரர்கள் இல்லையென்றால் சிறந்த கேப்டனாக உருவாக முடியாது. 

பிளே ஆப் முறை பாராட்டுக்குரியது. முதல் அல்லது 2 -வது இடங்க ளைப் பிடிக்கும் அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்