முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழி விவகாரம்: மணீஷ் திவாரி கருத்து

வெள்ளிக்கிழமை, 27 மே 2011      அரசியல்
Image Unavailable

புது டெல்லி,மே.27 - கனிமொழி எம்.பி. விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி கருத்து தெரிவித்துள்ளார். சட்டம் தன் கடமையை செய்கிறது. இதில் எந்த குறுக்கீட்டுக்கும் இடம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் கருணாநிதியின் மகளும், எம்.பியுமான கனிமொழி கைது செய்யப்பட்டுள்ளது தெரிந்ததே. ஜாமீன் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ள நிலையில் தி.மு.கவுக்கும், காங்கிரசுக்கும் இடையே இருந்து வரும் உறவு நலிவடையும் என்று ஒரு தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கான சாத்தியமே இல்லை என்று இரு கட்சியினரும் உறுதியாக கூறி வருகின்றனர். 

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ்திவாரி கூறுகையில், கனிமொழி எம்.பி. சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அவரது தந்தை கருணாநிதி மிகுந்த மன வேதனைக்கு ஆளாகி உள்ளார் என்பதை நாங்கள் உணராமல் இல்லை. ஆனால் அதே நேரத்தில் எந்த வழக்கிலும் நாங்கள் குறுக்கிட மாட்டோம். சட்டம் தன் கடமையை செய்யும். சுரேஷ் கல்மாடி விவகாரம் என்றாலும் சரி, அல்லது வேறு எந்த விவகாரம் ஆனாலும் சரி சட்டத்தின் செயல்பாட்டில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நாங்கள் தலையிட மாட்டோம். இவ்வாறு மணீஷ்திவாரி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago