முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாக்டருக்கு படித்து ஏழை மக்களுக்கு சேவை செய்வேன் முதலிடம் பிடித்த ஸ்ரீவில்லி மாணவி நித்யா பேட்டி

சனிக்கிழமை, 28 மே 2011      தமிழகம்
Image Unavailable

ஸ்ரீவில்லி,மே.- 28 - டாக்டராகி ஏழை மக்களுக்கு சேவை செய்வதே எனது குறிக்கோள் என்று 10 ம் வகுப்பு தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற ஸ்ரீவில்லி மாணவி நித்யா நிருபர்களிடம் தெரிவித்தார்.  தமிழகத்தில் 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் புனித இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நித்யா 496 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார். மேலும் விருதுநகர் மாவட்ட அளவிலும் மாணவி நித்யாவின் சாதனை முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் மாணவி நித்யாவின் தந்தை முருகேசன் வணிகவரித்துறை அதிகாரி. தாய் காந்திமதி. நித்யாவுக்கு சண்முகராஜன் என்ற ஒரு சகோதரர் உள்ளார். மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த மாணவி நித்யா, தமிழில் 98, ஆங்கிலத்தில் 98, கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியலில் தலா 100 மதிப்பெண்களும் என மொத்தம் 496 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இது குறித்து மாணவி நித்யா கூறுகையில், வகுப்பில் நடத்தப்படும் பாடங்களை அன்றைய தினமே படித்து விடுவேன். ஜெயா டி.வியில் மருத்துவ மகத்துவம் எனும் நிகழ்ச்சியை ஆர்வமாக பார்ப்பேன். என்னைப் போலவே என் பள்ளி மாணவிகளும் வருங்காலத்தில் படிப்பில் முதலிடம் பிடித்து சாதனை படைக்க வேண்டும். நான் டாக்டராகி ஏழைகளுக்கு சேவை செய்வேன். மேலும் பள்ளி தலைமையாசிரியை(பொறுப்பு) எக்ஸ்பெடித் வகுப்பு ஆசிரியை ரோஸ்லின் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவி நித்யாவுக்கு அவரது பெற்றோரும், சக மாணவிகளும் இனிப்பு வழங்கி பாராட்டினர்.மேலும் ஸ்ரீவில்லி சட்டமன்ற உறுப்பினர் பொன்னுப்பாண்டியன் மாவட்ட கலெக்டர் சண்முகம், மாரநாதா சபை பாஸ்டர் டேவிட் குமார் மற்றும் நகரில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்கள், பல்வேறு அமைப்பு சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் சார்பில் வாழ்த்துக்களை நித்யாவுக்கு தெரிவித்தனர். மாணவி நித்யா முதலிடம் பிடித்து சாதனை படைத்ததை முன்னிட்டு ஸ்ரீவில்லி நகரில் பல இடங்களில் வெடி வெடித்து கொண்டாடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago