முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகர்கோவிலில் உள்ள உரக்கிடங்கை மாற்றவேண்டும்-நாஞ்சில் முருகேசன்

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2011      தமிழகம்
Image Unavailable

நாகர்கோவில், மே.- 29 - நாகர்கோவில் வலம்புரிவிளையில் நகராட்சி உரக்கிடங்கு உள்ளது. இதனை இங்கிருந்து மாற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக போராடி வந்தனர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் நாஞ்சில் முருகேசன் இப்பகுதி மக்களிடம் தேர்தலில் நான் வெற்றி பெற்றால் இந்த உரக்கிடங்கை இங்கிருந்துஅப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று தேர்தலில் வாக்குறுதி அளித்தார். இப்போது அவர் வெற்றி பெற்று நாகர்கோவிலில் தொகுதி எம்.எல்.ஏ. ஆனதை தொடர்ந்து இன்று வலம்புரிவிளை உரக்கிடங்குக்கு சென்றார் அவருடன் நகரசபை என்ஜினீயர் தாமஸ்,நகர்நல அலுவலர் சந்திரன், சுகாதார அலுவலர் பகவதிபெருமாள் ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் எம்.எல்.ஏ ஆனதை தொடர்ந்து நேற்று வலம்புரிவிளை உரக்கிடங்குக்கு சென்றார். அவருடன் நகரசபை என்ஜீனியர் தாமஸ், நகர்நல அலுவலர் சந்திரன், சுகாதார அலுவலர் பகவதிபெருமாள் ஆகியோர் உடனிருந்தனர். அவர்களிடம் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் இந்த உரக்கிடங்கை உடனே மாற்ற வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் உத்தரவிட்டார். அதற்கு அதிகாரிகள் அவரிடம் உரக்கிடங்கை மாற்ற ரூ.1 கோடியே 44 லட்சம் செலவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு இருப்பதாக கூறினர். மேலும் மைலாடி கல்குவாரி பகுதியில் குப்பை கொட்ட இடம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் இறச்சகுளம் பகுதியில் சுமார் 50 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினர். அதனையடுத்து மாவசட்ட நிர்வாகத்தின் அனுமதியை விரைவாக பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்கும்படி அதிகாரிகளுக்கு நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது நாகர்கோவில் நகர அதிமுக செயலாளர் சந்திரன், நகர ஜெ.பேரவை செயலாளர் மாதவன்பிள்ளை மற்றும்  சி.என்.கெளதம்,
சி.என்.சுரேஷ்,கவுன்சிலர் அய்யப்பன் மற்றும் எம்.எல்.ஏ. உதவியாளர் சி.டி.பிள்ளை உள்பட பலர் இருந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்