முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலிபான் பேச்சு வார்த்தையில் பங்கேற்க இம்ரான்கான் சம்மதம்

செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், மார்ச்12 -   லிபான்களோடு பாகிஸ்தான் அரசு நடத்தும் அமைதிப் பேச்சுவார்த்தை குழுவில் பங்கேற்க முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் சம்மதம் தெரிவித்து ள்ளார். பாகிஸ்தான் அரசு தலிபான் களுடன் அமைதிப் பேச்சு நடத்த முன் வந்தது. இதற்கு ஆப்கான் அரதும் ஆதரவு தெரிவித்தது. 

ஆனால் கடந்த மாதம் பாகிஸ்தான் எல்லை படை வீரர்கள் 23 பேரின் தலையை துண்டித்து தலிபான் தீவிரவாதிகள் கொன்றனர். அதனால் பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டது. இதற்கிடையில் கடந்த வாரம் பாகிஸ்தான் அரசோடு பேச்சு வார்த்தை நடத்துவதற்கு சம்மதம் தெரிவி்த்து  தலிபான் தீவிரவாதிகள் ஒருமாதம் போர் நிறுத்தத்தை அறிவித்தனர். அதற்குப் பதிலாக தலிபான்கள் மீதான வான்வழித் தாக்குதலை  தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக பாகிஸ்தான் அரசும் அறிவி்த்தது.

இருதரப்பும் பேச்சு நடத்த முன் வந்த நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. முதல்கட்ட பேச்சு முடிந்த நிலையில் அமைதிப் பேச்சு வார்த்தை குழுவில் பங்கேற்க முன்னாள் கிரிக்கெட் வீரரும் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் சம்மதம் தெரிவி்த்துள்ளார். உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் அலிகானை அவரது இல்லத்தில் இம்ரான்கான் சந்தித்து பேச்சு நடத்தினார். அமைதிப்பேச்சு குழுவில் இடம்பெற வேண்டும் என்று தலிபான்கள் விரும்புகின்றனர். அதன்படி குழுவில் பங்கேற்க வேண்டும் இம்ரான்கானை அமைச்சர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து கைபர்-பக்துன்கவா மாகாண முதல்வர் பர்வேஸ் கட்டாக் தலைமையில் அமைக்கப்படும் அமைதிக் குழுவில் தனது கட்சி சார்பில் குல்சார்கான் கலந்துகொள்வார் என்று இம்ரான்கான் அறிவி்த்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்