முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயமான விமானம்: தேடுதல் வேட்டையில் பலனில்லை

திங்கட்கிழமை, 10 மார்ச் 2014      வர்த்தகம்
Image Unavailable

 

கோலாலம்பூர், மார்ச்.11 - மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள வியட்நாம் பேரிடர் மீட்புப் பணி வீரர்கள் குழுவினர், விமானம் குறித்து இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். 

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 227 பயணிகள், 12 சிப்பந்திகளுடன் எம்.எச். 370 விமானம் கடந்த சனிக்கிழமை அதிகாலை 12.41 மணிக்கு சீனத் தலைநகர் பெய்ஜிங் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து திடீரென மாயமானது. அதனால் தென் சீனக் கடலில் விழுந்து மூழ்கியிருக் கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

ரேடாரில் இருந்து திடீரென மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 40 கப்பல்கள், 22 ஜெட் விமானங்கள் தேடி வருகின்றன. 

இந்நிலையில், கடலில் ஒரு பொருள் மிதப்பதாகவும், அந்த பொருள் மலேசிய விமானத்தின் உடைந்த பாகமாக இருக்கலாம் எனவும் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் தேடுதல் முடுக்கிவிடப்பட்டது. 

இருப்பினும், விடிய விடிய தேடுதல் வேட்டை நடத்தியும் எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை என விமானத்தின் உடைந்த பாகத்தை தேடும் பணியில் ஈடுபட்ட வியட்நாம் பேரிடர் மீட்புப் பணி வீரர்கள் குழு தலைவர் டோன் ஹூ ஜியா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்