முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனில் உள்ள கிரீமியா சுதந்திரம் அடைந்ததாக அறிவிப்பு

புதன்கிழமை, 12 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

கிவ், மார்ச்.13 - சோவியத் ரஷியாவில் இருந்து பிரிந்த நாடுகளில் உக்ரைனும் ஒன்று. இங்குள்ள கிரீமியா தீபகற்ப பகுதி ரஷியாவைய ஒட்டியுள்ளது. இங்கு வாழ்பவர்களில் 65 சதவீதம் பேர் ரஷியர்கள். இப்பகுதி தன்னாட்சி உரிமம் பெற்றது.

அவர்கள் ரஷியாவுக்கு ஆகரவாகவே இருந்து வந்தனர். சமீபத்தில் உக்ரைனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் கிரீமியா பகுதியை ரஷிய ராணுவம் ஆக்கிரமித்தது. அதற்கு கிரீமியா பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தற்போது அங்குள்ள பாராளுமன்ற கட்டிடம் மற்றும் அரசு அலுவலகங்களில் ரஷியா தேசிய கொடி பறக்க விடப்பட்டுள்ளது. ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. அதை ரஷியா கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையே உக்ரைனிடம் இருந்து விடுதலை பெற்று ரஷியாவுடன் இணைய கிரீமியா விருப்பம் தெரிவித்துள்ளது. அதற்கான தீர்மானம் கிரீமியா பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானம் நேற்று பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு எம்.பி.க்கள் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து கிரீமியா உக்ரைனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் ரஷியாவுடன் கிரீமியா இணைய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான வாக்கெடுப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. எமவே போதுமக்களிடம் மருகிற 16-ந் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பதவி நீக்கம் செய்யப்பட்டு தற்போது ரஷியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் உக்ரைன் முன்னாள் அதிபர் விக்டர்யனு கோவிச் ரோஸ்டவ் ஆன்டான் நகரில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நான இன்னும் உக்ரைனின் அதிபராகவும், உத்தபவு வழங்க கூடிய தலைமை பதவியிலும் இருக்கிறேன். நான் இன்னும் நீண்ட நாட்கள் இங்கு இருக்க போவ தில்லை. உக்ரைன் தலைநகரான கிவ்வுக்கு செல்வேன். அதில் எவ்வித சந்தேகவும் இல்லை என்றார்.

இதற்கிடையே கிரீமியா சுதந்திரம் பெற்ற பகுதியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் கிரீமியா பாராளுமன்றத்தை கலைத்து விடுவோம் என உக்ரைன் அரசு மிரட்டி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago