முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசிய விமானத்தின் துரும்பு கூட கிடைக்கவில்லை

புதன்கிழமை, 12 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

கோலாலம்புர், மார்ச்.13 - 5 நாட்களாக தேடியும் 239 பேருடன் கடலில் விழுந்த விமானத்தின் துரும்பு கூட இதுவரை கிடைக்கவில்லை.  மலேசியா தலைநகர் கோலாலம்புரில் இருந்து சீன தலைநகரம் பெய்ஜிங்குக்கு சென்ற மலேசிய விமானம் திடீரென மாயமானது. அதில் பயணம் செய்த 239 பேர் கதி என்னவென்று தெரியவில்லை. கடந்த 8-ந் தேதி அதிகாலை 2.40 மணிக்கு ரேடார் தொடர்பை இழந்தது. தெற்கு சீன கடலுக்கு மேலே பறந்த போது தான் ரேடார் தொடர்பு இழந்தது.

இந்த விமானம் வியட்நாம் தோ ஷூ தீவு அருகே கடலில் விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே இந்த விமானத்தை தேடும் பணியில் மலேசியா, வியட்நாம், அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர் உள்ளட்ட 10 நாடுகள் ஈடுபட்டுள்ளன. 36 போர் விமானங்கள், 40 போர்கப்பல்கள் மற்றும் நூற்றுக்கணக்கான படகுகள் விமானத்தை தேடி வருகின்றன.

விமானம் கடநத 8-மா தேதி காலை கடலில் விழுந்தது. அதில் இருந்து தேடும் பணி தொடங்குகியது. ஆனால் விமானம் கடலில் விழுந்ததுக்கான எந்த வித அறிகுறியும் தென்படவில்லை. பொதுவாக விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானால் அதன் உடைநத பாகங்கள் மீட்கப்படும். அதில் பயணம் செய்தவர்களின் உடல்கள் தண்ணீரில் மிதக்கும்.

ஆனால் விமானம் கடலில் கிடப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. மேலும் விமானத்தின் சிறு துரும்பு கூட கிடைக்கவில்லை. இது விமான மிட்பு குழுவினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளாகும் போது விமானம் சுமார் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்ததாக தெரிகிறது. மிக உயரத்தில் இருந்து தலைகீழாக பாய்ந்து விமானம் கடலின் மிக ஆழமான பகுதிக்குள் சென்று மூல்கி கிடக்கலாம். அதனால் வெளியே வர முடியாத படி  ஆழ்ந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

எனவே, அடுத்த கட்டமாக அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் ஆழ்கடலுக்குள் மூவ்கி கடலுக்குள் கிடக்கும் விமானத்தை தேடும் பணி நடைபெற உள்ளது. இதற்கிடையே, இந்த விமானம் சீனா செல்லாமல் திசைமாரி மலாய தீபகந்பத்துக்கும், இந்தோனேச்யாவின் சுமத்தரா தீவுக்கும் இடையே உள்ள மலாக்கா ஜலகந்திக்கு மேலே சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மலாக்கா ஜலகந்தி சுமார் 805 கி.மீட்டர் நீளம் உடையது. எனவே அங்கு இந்த விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்றும் கருதப்பட்டது. ஆனால் அதை மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் மருத்துள்ளது.

மேலும், மாயமான விமானத்தை சீனாவின் ஜியான் செயற்கை கோள்மையத்தின் மூலம் கண்டுபிடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் 10 உயர்சிறன் செயற்கை கோள்களை பயன்படுத்தவும் ஏற்பாடு நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்