முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் 116 - 26 விசைப் படகுகளை விடுவிக்க உத்தரவு

புதன்கிழமை, 12 மார்ச் 2014      தமிழகம்
Image Unavailable

 

கொழும்பில், மார்ச்.13 - கொழும்பில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட மீனவ பேச்சுவார்த்தைக்கு முன்னர் தமிழக மீனவர்கள் 116 பேரை படகுகளுடன் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து  உத்தரவிட்டது. 

தமிழக - இலங்கை இருநாட்டு மீனவர்களின் முதலாம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி 27 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு இலங்கை சிறைச்சாலைகளில் 177 தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் தமிழக முதல்வர் கொழும்பில் நடக்க இருக்கும் பேச்சுவார்த்தைக்கு முன்னர் இலங்கை சிறைச்சாலைகளில் வாடும் மீனவர்களை விடுவிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கோரிக்கை விடுத்தார். 

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற காவல் முடியும் முன்னரே தமிழக மீனவர்கள் 116 பேர் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

பின்னர் இலங்கை நீதித்துறையின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக மீனவர்கள் 116 பேரையும் அவர்களின் 26 விசைப்படகுகளையும் விடுதலை செய்து நீதிபதி லெனின்குமார் உத்திரவிட்டார். 

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். மீனவர்கள் அனைவரும் தாயகத்திற்கு ஒரிரு நாட்களில் திரும்புவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago