முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னிய செலாவணி: ரூ.32 ஆயிரம் கோடி முறைகேடு

புதன்கிழமை, 12 மார்ச் 2014      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச். 13 - மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தொடர்ந்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மத்திய புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையில் ரூ.32 ஆயிரம் கோடி அளவுக்கு  மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அன்னிய செலாவணி வர்த்தக மோசடியில் இந்த அளவுக்கு மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் ஆகியும் அதை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மிக எச்சரிக்கையோடு மறைத்துள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 

இந்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பொது கணக்குக் குழு இது தொடர்பாக நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியதோடு இது தொடர்பாக விளக்கம் அளி்க்குமாறு கேட்டுக்கொண்டது. இந்திய நிறுவனங்கள் விற்பனை செய்ததில் இந்த முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் இதுவரையில் இது தொடர்பான விளக்கம் எதையும் நிதி அமைச்சகம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

2011-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவை பிரிவுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்தின் கருத்துகளும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளன. மிகப்பெரிய இழப்பை மீட்பதற்கு என்ன நடவடிக்கை  எடுக்கப்பட்டது என பிஏசி கேட்டிருந்த கேள்விக்கு பதில் ஏதும் கிடைக்கவே இல்லை. 

ஆனால் இந்த முறைகேடு குறி்த்து விசாரணை நடத்துவது ரிசர்வ் வங்கியின் விசாரணை வரம்புக்குள் வரவி்ல்லை என்றும் தெரிகிறது. இந்த விஷயம் குறி்த்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில்  பிஏசி இதை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஆனால் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையையும் நிதி அமைச்சகம் எடுக்கவில்லை என்றும் பிஏசி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி யுள்ளது.

இந்த விவகாரம் முதலில் வெளியானது 2008-ம் ஆண்டு தான். அப்போது ரிசர்வ் வங்கியின் அன்னியச் செலாவணி நிர்வாகச் சட்டத்தை 19 வங்கிகள் மீறியது தெரிய வந்தது. இந்திய நிறுவனங்கள் அன்னியச் செலாவணி  பங்கு மோசடி செய்ததால் பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனால் இந்திய  முதலீட்டாளர்களுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. அதே சமயம் வெளிநாடுகளி்ல் தலைமை யகத்தை கொண்ட வங்கிகள் ஆதாயமடைந்தன. ஆனால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ரிசர்வ் வங்கி வெறும் ரூ.19 கோடி அபராதத்தை மட்டுமே வங்கிகளுக்கு வி்தித்தது.                

அன்னிய பங்கு வர்த்தகமானது எதிர்கால அன்னியச் செலாவணி  விகிதத்தை நிர்ணயிக்கும் கருவியாகும். ஆனால் இதன் பாதி்ப்பை ஆர்பிஐ அதிகாரிகள் உணரவே இல்லை என்று சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இந்திய வங்கிகளோ  மதி்ப்பை மிகைப்படுத்தி சுட்டிக்காட்டின. இதனால் மோசடியான முதலீ்ட்டாளர்கள்  வலையில் வங்கிகள் விழுந்தன. ஏற்றுமதியாளர்களும், இறக்குமதியாளர்களும் மி்கைப் படுத்தப்பட்ட மதிப்பு வலையில் விழுந்தனர். தங்கள்  வசமிருந்த  வெளிநாட்டுப் பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் மிக அதிக அளவிலான அன்னியச் செலாவணி  நாட்டிலிருந்து வெளியேறியது என்றும் சிபிஐ குறி்ப்பி்ட்டுள்ளது. 

மே 19, 2009-ம் ஆண்டு ஒடிசா உயர் நீதிமன்றத்தில் பொருளாதார நிபுணர் பிரவஜனம் பாத்ரா என்பவர் தாக்கல் செய்த ரிட் மனு மூலம் காரணமாக இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்தே இந்த விஷயம் வெளி்ச்சத்துக்கு வந்துள்ளது. 

வங்கிகள் அன்னியச் செலாவணி வர்த்தகத்தில் விதிகளை மீறியது உண்மையான மதி்ப்பைக் காட்டிலும் மிகைப்படுத்தப்பட்ட சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டது. லாபமீட்ட வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தும் நவம்பர் 4, 2009-ம் ஆண்டு தனது அறிக்கையில் சிபிஐ குறி்ப்பிட்டிருந்தது. 

இந்த பிரச்சனையை ரிசர்வ் வங்கி மற்றும் அமலாக்கப் பிரிவு இயக்குநரகம்  விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. அன்னிய பங்கு வர்த்தக த்தில் வங்கிகள் பல்வேறு நிறுவனங் களுடன் ஈடுபட்டுள்ளன. இதை ரிசர்வ் வங்கி விசாரிக்க வேண்டும். மேலும் இதில் அன்னியச் செலாவணி  விதி மீறலை அமலாக்கப் பிரிவு ஒவ்வொரு வழக்காக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியது. இந்த விவகாரத்தில்  கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை. 2011-ம் ஆண்டு ஏப்ரல் 26-ல் வங்கிகளுக்கு கணிசமான தொகை அபராதமாக விதிக்கப்பட்டது. அதுவும் பல முதலீட்டாளர்கள் பொது நல வழக்கு தொடர்ந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும்  நிதிச் சேவை துறை பிஏசி கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதிலில் குறிப்பி்ட்டுள்ளது. அதிலும் இந்த குறிப்பிட்ட நடவடிக்கையானது ரிசர்வ் வங்கியின் விசாரணை வரம்புக்குள் வரவி்ல்லை என்றும் தெரிவி்த்துள்ளது. 

ஆனால் மிகப்பெருமளவிலான மோசடி நடந்துள்ளது என்பதை ரிர்வ் வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.

         

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்