முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவை எதிர்த்து போரிட மாட்டோம்: உக்ரைன் அதிபர்

வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

கீவ்,மார்ச்.15 - உக்ரைனின் கிரிமியா பகுதியில் உள்ள ரஷ்ய படையினரை எதிர்த்து போரிடும் திட்டம் ஏதுமில்லை என்று உக்ரைன் அதிபர் (பொறுப்பு) ஒலெக் ஸாண்டர் டர்க்கினாவ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்துக்கு அதிபர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “கிரிமி யாவுக்கு எதிராக ராணுவ ரீதியான தாக்குதலை எங்களால் மேற்கொள்ள முடியாது. அவ்வாறு செய்தால், எங்களின் கிழக்கு எல்லைப் பகுதியில் பாதுகாப்பு அற்ற சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைப்பதா, வேண்டாமா என்பது பற்றி மார்ச் 16-ம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த வாக்கெடுப்பு நடவடிக்கை போலியானது. பொதுவாக்கெடுப்பின் முடிவை, கிரிமியாவில் அல்ல, ரஷ்யாவில்தான் தீர்மானிப்பார்கள். பெருமளவிலான கிரிமியாவைச் சேர்ந்த மக்கள், இந்த வாக்கெடுப்பில் பங்கேற்க மாட் டார்கள்” என்றார்.

இந்த பிரச்சினைக்கு தூதரக ரீதியில் தீர்வு காண்பதற்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்து வருகிறது. வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலமும், அரசு உயர் அதிகாரிகள் மூலமும் பேச்சு நடத்துவதற்கு ரஷ்ய ஒப்புக்கொள்ளவில்லை” என்று டர்க்கினோவ் கூறினார்.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஒபாமாவை, உக்ரைன் பிரதமர் அர்சினி யாட்செனியுக் வாஷிங்டன்னில் சந்தித்து பேசினார். கிரிமியா பகுதியில் ரஷ்ய படையினரின் ஆதிக்கம், ரஷ்யாவுடன் கிரிமியா இணைவது தொடர்பாக பொது வாக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஒபாமாவுடன் உக்ரைன் அதிபர் யாட்செனியுக் பேசினார். உக்ரைனுக்கு பொருளாதார உதவி களை செய்ய வேண்டும். ரஷ்ய முயற்சிகளை எதிர்த்து நிற்பதற் கான தார்மிக ஆதரவினை தர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிரிமியா பகுதியில் உள்ள ரஷ்ய படையினர், உடனடியாக வெளியேற வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக செனட் அவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உக்ரைனின் இறையாண்மையை பாதுகாக்க, ரஷ்ய படையினரை அந்நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும். அவ்வாறு வெளியேற மறுத் தால், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று செனட் அவை தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்