முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவீரவாதி ஹெட்லி குடும்பத்தாருடன் பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு தொடர்பு

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2011      ஊழல்
Image Unavailable

சிகாகோ,மே.- 30 - என் தந்தை சைது சலீம் கிலானி இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி கலந்துகொண்டார் என்று தீவிரவாதி டேவிட் ஹெட்லி சிகாகோ கோர்ட்டில் வாக்குமூலம் கொடுத்துள்ளான். மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதிகள் டேவிட் ஹெட்லி, மற்றும் அவனது கூட்டாளியான ராணா ஆகியோர் அமெரிக்காவில் உள்ள சிகாகோ கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகிறார்கள். கடந்த பல நாட்களாக நடைபெற்று வரும் இந்த விசாரணையில் ஹெட்லி பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறான். மும்பையில் நடந்த தாக்குதலுக்கும் எனக்கும் உடந்தை உள்ளது என்றும் சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரேவை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டது என்றும் கொச்சி உள்பட பல முக்கிய நகரங்களை தாக்க திட்டமிடப்பட்டது என்றும் டெல்லியில் ராணுவ பயிற்சி அகாடமியை தாக்க திட்டமிட்டோம் என்றும் இதற்கெல்லாம் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம்தான் உதவி செய்தது என்றும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகிறான்.
இந்தநிலையில் என்னுடைய தந்தை சையது சலீம் கிலானியின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி கலந்துகொண்டார் என்றும் ஹெட்லி திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளான். கடந்த 2010-ம் டிசம்பர் மாதம் சைது இறந்தார். இவர் ஒரு பெரிய கவிஞர், எழுத்தாளர், இசையமைப்பாளரும் கூட. பாகிஸ்தான் வானொலி இயக்குனராகவும் பணியாற்றியவர். வாஷிங்டன்னில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்தார். பாகிஸ்தான் பிரதமர் கிலானியின் அலுவலகத்திலும் ஹெட்லியின் ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவரும் பணிபுரிந்தார் என்றும் தெரியவந்துள்ளது. எல்லாவற்றையும் பார்க்கும்போது இந்தியாவில் நாசவேலையை ஏற்படுத்துவதில் பாகிஸ்தானை சேர்ந்த முக்கிய தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோர்கள் அனைவரும் சேர்ந்திருப்பார்கள் போல தெரிகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்