முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் 6.3 ரிக்டரில் கடும் நில நடுக்கம்

வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ, மார்ச் 15  - ஜப்பானில் நேற்று 6.3 ரிக்டரில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தால் வீடுகள் இடிந்தன. 18 பேர் காயமடைந்கனர்.  ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் நிலநடு்க்கம் ஏற்பட்டது. இதனால் குயிஷீ தீவின் வடக்கு கடற்கரை அருகேயுள்ள 4 பெரிய தீவு பகுதிகள் அதிர்ந்தன. இதையடுத்து இப்பகுதியில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. 

இதனால் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர். ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டம் ஆயின. தண்ணீ்ர் குழாய்கள் உடைந்தன. வீடுகள் இடிந்து விழுந்ததில் 18 பேர் காயமடைந்தனர். மீட்பு குழுவினர் விரை ந்து சென்று மீட்டனர். இதனால் ரயில் போக்குவரத்து தாமதமானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்