முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் ஒபாமா விரைவில் மிகப்பெரியஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாவார்- அரசியல் விஞ்ஞானி கணிப்பு

திங்கட்கிழமை, 30 மே 2011      ஊழல்
Image Unavailable

லண்டன்,மே.- 30 - அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா விரைவில் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாவார் என்று பேராசிரியரும் அரசியல் விஞ்ஞானியுமான பிரேந்தன் நிஹென் என்பவர் கணித்து கூறியுள்ளார். மிஸ்சிஹன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பிரெந்தன் நிஹென் பணியாற்றி வருகிறார். கணக்கு விதிமுறைகளின் படி இவர் ஒரு கணிப்பு செய்து அதை அரசியல் மையம் என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த கணிப்பில் அதிபர் ஒபாமா விரைவில் ஒரு மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாவார் என்று குறிப்பிட்டுள்ளார். அதனால் ஒபாமாவின் நிர்வாகத்திற்கு ஒரு பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் கறுப்பு இனத்தை சேர்ந்த முதல் அதிபர் ஒபாமா மீது இந்த ஊழல் குற்றச்சாட்டானது அமெரிக்க அதிபர் தேர்தல் நடப்பதற்கு முன்பு வெளியாகலாம் அதாவது அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் இந்த மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டு வெளியாகுவதற்கு 90 முதல் 95 சதவீதம் வரை வாய்ப்பு உள்ளது என்றும் தி டெய்லி மெயில் என்ற பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகின்ற 2012-ம் ஆண்டு நடைபெற உள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago