முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனப்படுகொலை: ருவாண்டா தளபதிக்கு 25 ஆண்டு ஜெயில்

ஞாயிற்றுக்கிழமை, 16 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

பாரீஸ், மார்ச். 17 - இனப்படுகொலை செய்த ருவாண்டா முன்னாள் ராணுவ தளபதிக்கு 25 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பிரான்ஸ் கோர்ட்டு தீர்ப்பளித்தது. 

மத்தியஆப்பிரிக்க நாடான ருவாண்டாவின் முன்னாள் ராணுவ தளபதி ஆக இருந்தவர் தவர்பஸ்கர் சிம்பிகங்வா (54). 

கடந்த 1994 ம் ஆண்டு ருவாண்டாவில் துட்சி இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் இவர் ஈடுபட்டார். 

ஆயிரக்கணக்கான துட்சி இன மக்களை கொன்று குவித்தார். இதனால் அவர் மீது சர்வதேச கோர்ட்டில் இனப்படுகொலை வழக்கு தொடரப்பட்டது 

அவர் மீது 2008 ம் ஆண்டு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. எனவே அவர் இங்கிருந்து தப்பி தலைமறைவானார். 

பின்பு தீவிர தேடுதல் வேட்டையில் கடந்த 2009 ம் ஆண்டு இந்திய பெருங்கடலில் பிரான்சுக்கு சொந்தமான மயோட் தீவில் கைது செய்யப்பட்டார். 

இதனைத் தொடர்ந்து அவர் மீது பிரான்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்றது. 

அப்போது அவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதிக்கும்படி கோரப்பட்டது. ஆனால் அவருக்கு 25 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்