முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூயார்க் இரட்டை கோபுரம் சம்பவம்: அபு காய்த் வாக்குமூலம்

வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், மார்ச் 22 - உலக நாடுகளை எச்சரிக்கவே நியூயார்க்கில் இருந்த இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் அல் காய்தா தீவிரவாத அமைப்பின் முன்னாள் தலைவரும் பின்லேடனின் மருமகனுமான அபு காய்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நீயூயார்க் இரட்டை கோபுரம் தகர்ப்பு சம்பவம் தொடர்பாக மன்ஹாட்டனில் உள்ள நீதிமன்றத்தில் அபு காய்துக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஆஜராகி அவர் தெரிவித்ததாவது: இரட்டை கோபுரம் தகர்ப்பு சம்பவத்துக்கு பிறகு, சந்திக்க பின்லேடன் விரும்பினார். இதனையடுத்து காந்த ஹாரில் இருந்து 3 மணி நேரம் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள குகை ஒன்றுக்கு சென்றேன். அங்கே இருந்த பின்லேடன், என்னிடம் இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவத்துக்கு  காரணமானவர்களில் நாமும் ஒருவர் என்றார்.

பிறகு இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று என்னிடம் கருத்துக் கேட்டார். அதற்கு நான், இந்த தாக்குதலை நடத்தியது நீங்கள்தான் என்பது நிரூபணமானால், உங்களை கொல்லும் வரையிலும், ஆப்கானிஸ்தானில் இருக்கும் தலிபான் அரசை அகற்றும் வரையிலும் அமெரிக்கா ஒயாது என்று தெரிவித்தேன். அதற்கு என்னைப் பார்த்து, நீ எதிலும் குறைக் காணும் நபர் என்று பின்லேடன் தெரிவித்தார். நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரத்தை தகர்த்து, உலக நாடுகளை எச்சரிக்க பின்லேடன் விரும்பினார். அதற்காகவே அந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவம் குறித்து முன்கூட்டிய எனக்குத் தெரியாது. தொலைக்காட்சி செய்திகள் மூலமே தெரிந்து கொண்டேன். 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலணிக்குள் வெடிகுண்டை மறைத்து வைத்து விமானத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று அபு காய்த்  கூறியுள்ளார்.

குவைத்தை சேர்ந்த அபு காய்த், பின்லேடனின் இளைய மகள் பாத்திமாவை திருமனம் செய்துள்ளார். கைது செய்யப்படுவதற்கு முன்பு, பின்லேடனின் செய்தி தொடர்பாளராக செயல்பட்டு வந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்