முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமான செயற்கைக்கோள் படத்தை வெளியிட்டது சீனா

சனிக்கிழமை, 22 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

கோலாலம்பூர்,மார்ச்.24 - மாயமான மலேசிய விமானத்தைச் சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் பாகங்கள், இந்தியப் பெருங்கடலில் மிதப்பது போன்ற படங்களை சீன செயற்கைக்கோள் பதிவு செய்துள்ளது.

தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உடைந்த 2 துண்டுகள் மிதப்பதை செயற்கைக்கோள் உதவியுடன் ஆஸ்திரேலிய விமானப் படை கண்டுபிடித்தது. கடந்த 2 நாள்களாக அவற்றை தேடியதில் எந்தத் தடயமும் கிடைக்காததால் அவை கடலில் மூழ்கியிருக்கலாம் என்று கருதப்பட்டது.

இந்த நிலையில், இந்திய பெருங்கடலில் விமானத்தின் பாகங்கள் மிதப்பது போலான படங்களை சீன செயற்கைக்கோள் அனுப்பியுள்ளதாகவும், அது தொடர்பான தகவலை சீனா பகிர்ந்துள்ளதாகவும் மலேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசேன் தெரிவித்தார்.

மேலும், அந்த இடத்துக்கு தங்கள் கப்பலை அனுப்பி, விரிவான ஆய்வு நடவடிக்கையில் சீனா ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த செயற்கைக்கோள் படத்தில் காணப்படும் தோற்றம், இரண்டு வாரங்களுக்கும் மேலாக கண்டுபிடிக்க முடியாத மாயமான மலேசியா விமானத்தின் பாகங்களாக இருப்பதற்கான சாத்தியம் உண்டென நம்பப்படுகிறது.

தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் 24 மீட்டர் அளவுக்கு நீளமான பாகம், அந்த செயற்கைக்கோள் படத்தில் காட்சியளிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்