முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்து பொதுத் தேர்தல் செல்லாது: நீதிமன்றம் அதிரடி

சனிக்கிழமை, 22 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

பாங்காக், மார்ச் 23 - தாய்லாந்தில் கடந்த மாதம் 2-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தல் செல்லாது என அந்நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே நாளில் வாக்கெடுப்பு நடத்தப்படாததால் அந்தத் தேர்தல் நாட்டின் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும், பிரதமர் யிங்லக் ஷின வத்ரா தலைமையிலான இடைக்கால அரசுடன் கலந்தாலோசித்து புதிய தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும் என்றும் அந்ந நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், தேர்தலின்போது தெற்கு மாகானங்களைச் சேர்ந்த 28 தொகுதிகளில் யாரும் போட்டியிடாததால் அங்கு தேர்தல் நடைபெற வில்லை. அரசியலமைப்பு சட்டத்தின் 108(2)-ஆம் பிரிவின்படி ஆனைத்து தொகுதிகளிலும் ஒரே நாளில் வாக்கெடுப்பு நடைபெற வேண்டும். அந்த விதி மீறப்பட்டுள்ளதால், கடந்த மாதம் நடந்த பொதுத் தேர்தல் செல்லாது என்று அறிவித்தனர். 2011-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய யிங்லக் ஷினவத்ரா ஆட்சியமைத்தார்.

ஆனால், 2006-ஆம் ஆண்டு ராணுவப் புரட்சியின் மூலம் பதவி நீ்க்கம் செய்யப்பட்ட முன்னனாள் பிரதமரும், தனது சகோதரருமான தாக்ஸின் ஷினவத்ராவின் கைப்பாவையாக அவர் செயல்படுவதாகக் கூறி எதிர்கட்சியான ஜனநாயக கட்ச்யினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சியினரின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை களைத்து விட்டு தேர்தலை நடத்துவதாகவும், இடைக்கால பிரதமராக தொடருவதாகவும் யிங்லக் அறிவித்தார். எனினும்  அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுருத்திய எதிர்கட்சியினர் தேர்தலையும் புறக்கணித்தனர். தேர்தலின் போது பல அரசு அலுவலகங்களைக் கைபற்றியதுடன வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவர்களையும், வாக்களிக்க வந்தவர்களையும் தடுத்து நிறுத்தினர்.

அதன் காரணமாக, எதிர்க்கட்சிகளின் தெல்வாக்கு அதிகம் நிறைந்த 28 தொகுதிகளில் யிங்லக் தலைமையிலான பியூ தாய் கட்சியினர் வேட்பாளர்கள் உள்பட யாரும் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டு அத்தொகுதிகளில் தேர்தல் நடைபெறவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago