முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்னாப்பிரிக்க பாடத்திட்டத்தில் மீண்டும் தமிழ்

ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

ஜொக்ன்னாஸ்பர்க், மார்ச் 24 - தென் ஆப்பிரிக்க அரசுப் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, குஜராத்தி, உருது ஆகிய இந்திய மொழிகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 

இங்குள்ள இந்திய வம்சாவளி மக்கள் 14 லட்சம் பேரின் கோரிக் கையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த மொழிகள் முதல்கட்டமாக இந்திய வம்சாவளியினர் பெரும் பான்மையாக வசிக்கும் கவாசுலு - நடால் மாகாணத்தில் மூன்றாவது மொழிப் பாடமாக, விருப்பப் பாடமாக கற்பிக்கப்படும். 

தென்னாப்பிரிக்காவில் சில பள்ளிகளில் இந்திய மொழி களுக்கான வகுப்புகள் நடந்து வரு கின்றன. என்றாலும் இந்த மொழிப்பாடங்கள் அரசின் அங்கீ கரிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இல்லை. 

இனி பள்ளிப்படிப்பு இறுதி வரை இந்த மொழிப்பாடங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பாடத் திட்டங்களாக இருக்கும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்