முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்னை பதவியிறக்க முயற்சி: மகிந்தா ராஜபட்ச

திங்கட்கிழமை, 24 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, மார்ச் 25 - சர்வதேச உதவியுடன் எதிர்க்கட்சிகள் தன்னைப் பதவியிறக்க முயர்ச்சிபதாக இலங்கை அதிபர் மகிந்தா ராஜ்பட்ச் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையில் உள்ள 2 மாகாண சட்டப்பேரவைகளுக்கு அடுத்த தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரத்தின் போது கலுதாரா நகரத்தில் அவர் பேசியதாவது: இலங்கைக்கு எதிரான சக்திகளின் வியாபாரிகளாக எதிர்க்கட்சியினர் செயல்படுகின்றனர். மக்களின் மனதை வெல்ல முடியாது என்பது அவர்களுக்கு தெரியும். எனவேதான, அரசைக் கவிழ்ப்பதற்கு சர்வதேச உதவியை அவர்கள் நாடுகின்றனர். 

புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரசாரத்தால், ஐ.நா. மனித உரிமைகள் குழுத் தலைவர் நவநீதம் பிள்ளை மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் எங்களுக்கு எதிராக திரும்பியுள்ளனர். தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்ததற்காக நாங்கள் தண்டிக்கப்படுகிறோம். நாம் தமிழர்களுடன் மோதவில்லை. தீவிரவாதத்துடன் மட்டுமே மோதினோம். இந்த விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீட்டை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் பேசினார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின் போது தமிழர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெற்றது தொடர்பாக இலங்கைக்கு எத்ராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்காவால் இதுவறை இரண்டு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த இரண்டுக்கும் இந்தியா ஆதரவு அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்