முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானம் நொறுங்கியதற்கு ஆதாரங்களை கேட்கும் சீனா

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

பீஜிங், மார்ச் 26 - மாயமான விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து நொறுங்கி விட்டது. அதில் சென்றவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறுவதற்கு என்ன ஆதாரம்? என்று மலேசிய அரசை சீனா கேட்டுள்ளது.

மலேசிய தலைநகர் கொலாலம்பூரில் இருந்து கடந்த 8-ஆம் தேதி சீன தலைநகர் பீஜிங் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் திடீரென மாயமானது. அதில் சீன நாட்டவர்கள் 156 பேர் உள்பட 239 பேர் பயணம் செய்தனர். விமானம் கடத்தப்பட்டதா, எங்காவது விழுந்து நொறுங்கியதா என்பது தெரியவில்லை. இரண்டு வாரங்களுக்கு மேல் மர்மம் நீடிக்கும் நிலையில், மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி உள்ளது. அதில் சென்றவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன், என்று மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இங்கிலாந்தின் இன்மார் சாட் நிறுவனம் வெளியிட்ட சாட்டிலைட் படங்கள் மற்றும் தகவலின்படி மலேசிய விமானம் கடலில் மூழ்கி இருக்கலாம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்திய பெருங்கடல் பகுதி மிக பெரியது. அங்கு விமானம் தரையிரங்குவதற்கு வாய்ப்பில்லை என்று நஜீப் ரசாக் கூறினார்.

விமானத்தில் சென்றவர்களில் பெரும்பாலானோர் சீன நாட்டினர். அவர்களின் உறவினர்கள் ஏதாவது தகவல் கிடாக்காதா எம்று அறிய பீஜிங் விமானநிலையத்திலும் அருகில் உள்ள ஓட்டல்களிலும் தங்கி உள்ளனர். மலேசிய பிரதமரின் அறிவிப்பை குறித்து தகவலை, பயணிகளின் உறவினர்களுக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் உடனடியாக  எஸ்எம்எஸ் மூலம் அனுப்பியது. அந்த தகவலை பார்த்தவுடன் அவர்கள் கண்ணிர் விட்டு கதறினர். சிலர் மயக்கம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பீஜிங் விமான நிலையத்தில் பதற்றம் நிலவியது.

இதையடுத்து விமானம் கடலில் மூழ்கி விட்டது, அதில் பயணம் செய்தவர்கள் ஒருவர் கூட உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பதற்கு ஆதாரம் என்ன. இது தொடர்பாக கிடைத்துள்ள எல்லா தகவல்களையும் உடனடியாக வழங்க வேண்டும் என்று மலேசிய அரசை, சீன வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஜி ஹாங்ஷாங் வலியுருத்தி உள்ளார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து பொன்ற நாடுகள் கொடுத்த சாட்டிலைட் படங்கள் மற்றும் எல்லா தகவல்களையும் எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மலேசிய விமானம் நொறுங்கிவிட்டது என்று கூறி விட்டதால், தேடுதல் பணியும் நேற்றிரவே நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், விமானத்தின் கறுப்பு பெட்டியை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா நவீன் கருவியை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago