முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க கடற்படை தளத்தில் 2 பேர் சுட்டுக் கொலை

புதன்கிழமை, 26 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மார்ச்.27 - அமெரிக்க கடற்படை தளத்தில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் நார்போல்க் என்ற இடத்தில் கடற்படை தளம் உள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய கடற்படை தளமாகும். அங்கு " யு.எஸ்.எஸ்.மாஹான் " என்ற ஏவுகனைகளை அழிக்கும் போர்க் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரவு 11.20 மணியளவில் அந்த கப்பலில் ஒரு மர்ம நபர் புகுந்துவிட்டான். அதை தொடர்ந்து அவனை பாதுகாப்பு பணியில் இருந்த கடற்படை வீரர்கள் சரமாரியாக சுட்டுக் கொன்றனர். அப்போது நடந்த துப்பாக்கி சூடடில் கடலில் பயணம் செய்து கொண்டிருந்த மற்றொருவரும் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியானார். இந்த தகவலை நார்போல்க் கடற்படை தள பெண் செய்தி தொடர்பாளர் டெர்ரி டேவிஸ் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து விளக்கமாக வேறு தகவல் எதையும் அறிவிக்க அவர் மறுத்து விட்டார். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். பொதுவாக இக்கப்பலை பார்வையிட நுழைவு சீட்டு அனுமதி ( பாஸ் ) வாங்க வேண்டும். அல்லது பார்வையாளுடன் பாதுகாப்பு வீரர்களும் உடன் செல்வர். ஆனால், கப்பலில் நுழைந்த நபர் இது போன்று எந்த அனுமதியும் பெறவில்லை. இதனால் தான் சந்தேகப்பட்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்