முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் யாத்திரைக்கு 1.82 லட்சம் யாத்ரீகர்கள் பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2011      இந்தியா
Image Unavailable

ஜம்மு, மே.- 29 - அமர்நாத் குகை கோவிலுக்கு செல்ல இந்த ஆண்டு 1.82 லட்சம் யாத்ரீகர்கள் தங்களது  பெயர்களை பதிவு  செய்துள்ளனர். காஷ்மீரில் இமயமலைப்பகுதியில் 13,500 அடி  உயரத்தில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று சாமி தரிசனம் செய்வது  வழக்கம். இந்த ஆண்டும் இந்த யாத்திரையில் பங்கேற்க அனுமதி கோரி இதுவரை 1.82 லட்சம் யாத்ரீகர்கள்  தங்களது பெயர்களை பதிவு  செய்து கொண்டுள்ளனர். இந்த தகவலை காஷ்மீர் அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இணைய தளம் வாயிலான  மின்  பதிவு  மற்றும்  வங்கி பதிவுகள் மூலம்  இந்த அனுமதிக்கான பதிவுகள் செய்யப்பட்டுள்ளன என்று காஷ்மீர் மாநில  யாத்ரீகர் பதிவு குழுவின் துணை தலைவர் அப்துல் ஹமீது தெரிவித்தார்.
சுமார் 94 ஆயிரம் பேர் பாரம்பரியமான  பாகல்ஹாம் வழியில் செல்ல பதிவு செய்து கொண்டிருப்பதாகவும், சுமார் 88 ஆயிரம் பேர்  பல்தால் வழியாக செல்ல பதிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினர்.
நாடு முழுவதும் 149 வங்கிகள் மூலம் 1,45 ஆயிரம் பேர் பதிவு   செய்திருப்பதாகவும்,36 ஆயிரம் பேர் இணைய தளம் வாயிலாக பதிவு  செய்திருப்பதாகவும் அவர்  தெரிவித்தார்.
 இந்த பதிவுகள் கடந்த 10 ம் தேதி முதல் துவக்கப்பட்டன. இது வரை 19 நாட்களில் இவ்வளவு யாத்ரீகர்கள்  தங்களது பெயர்களை பதிவு  செய்து கொண்டுள்ளனர்.
பதிவு  செய்யப்பட்டவர்களின் பெயர் விவரங்களை ஸ்ரீ அமர்நாத் கோவில் வாரியம்  பதிவு  செய்து  அதற்கான ஏற்பாடுகளை  செய்து வருகிறது. பெயர்களை பதிவு  செய்யும் பணிகள் ஆகஸ்டு 13 ம் தேதி வரை நீடிக்கும். அதன் பிறகுசெப்டம்பர் மாதம் தொடங்கி ஜனவரியில் யாத்திரை முடிவடையும் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்