முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏப்ரல் 1 முதல் ஹெச்-1பி விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்

வியாழக்கிழமை, 27 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மார்ச் 28 - அமெரிக்காவில் பணி புரிவதற்கான ஹெச்-1பி விசாவுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அநேத நாட்டின் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து அமெரிக்கா சென்று பணியாற்றுவோருக்கு ஹெச்-1பி விசா அவசியமாகும். குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்த விசாவை பெருவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். வழக்கம்போல் இந்த ஆண்டிலும், 65,000 ஹெச்-1பி விசாக்கள் மட்டுமே வழங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது, தவிர அமெரிக்காவில் முதுகலைப்பட்டம் பெற்றவர்களுக்கென 20,000 ஹெச்-1பி விசாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஹெச்-1பி விசாவுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ள நிலையில் ஏப்ரல் 5-ஆம் தேதிக்குள்  தேவையான விண்ணப்பங்கள் வந்து செர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர். இன்று 28-ஆம் தேதிக்குப் பிறகுதான் அவை பரிசீலிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்