முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒட்டுக் கேட்கக் கட்டுப்பாடு: ஒபாமா அரசு புதிய திட்டம்

வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மார்ச் 29 - அமெரிக்க அரசின் ரகசிய கண்காணிப்பு நடவடிக்கைகளால் எழுந்துள்ள சர்ச்சையைத்தணிக்கும் விதமாக, தொலைபேசி ஒட்டுக்கேட்ப்பு நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டத்தை அதிபர் ஒபாமா வெளியிட்டார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு வட்சக்கணக்கானவர்களின் தொலைபேசிகளை ட்டுக் கேட்பதாக வெளியான தகவல்களால் உலகம் முழுவதிலுமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் அதிபர் ஒபாமா வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்களின் உரையாடல் பதவிகளை அரசு முழுவதாகவும், வைத்திருப்பதையும் தவிர்க்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும். அதன்படி எந்தவொரு, உளவு அமைப்பும், தொலைபேசி நிறுவனங்களிடமிருந்து அவர்களது வாடிக்கையாளர்களைின் உரையாடல் பதிவுகளைப் பெற நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும்.

பயங்கரவாத அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்குத் தேவையான தகவல்களை உளவு அமைப்புகள் திரட்டுவதற்கும் பாதிப்பு ஏற்படலாம், பொதுமக்களின் தனியுரிமையையும் பாதுகாக்கும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது, என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்