முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.எஸ்.இ. 10 வகுப்பு தேர்வு முடிவுகள் கிரேடு முறையில் வெளியீடு

புதன்கிழமை, 1 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஜூன்.1 - சி.பி.எஸ்.இ. 10 வகுப்பு தேர்வு முடிவுகள் முதன் முறையாக இவ்வாண்டு மதிப்பெண் குறிப்பிடமால் கிரேடு முறையில் வெளியீடப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு: நாடு முழுவதிலும் உள்ள 8 மண்டலத்தில் சென்னை மண்டலத்திலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. முதல் முறையாக இந்த ஆண்டு மதிப்பெண் குறிப்பிடாமல் கிரேடு முறையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த புதிய கிரேடு முறைப்படி பொதுத்தேர்வு எழுதுவது கட்டாயம் அல்ல.விரும்பியவர்கள் தேர்வு எழுதலாம். அந்த வகையில் சென்னை மண்டலத்தில் 89543 மாணவர்கள் 10​ம் வகுப்பு பொது தேர்வு எழுதினார்கள்.47269 மாணவர்கள் பள்ளி அளவில் தேர்வு எழுதினார்கள். தனி தேர்வர்களாக 1259 பேர் எழுதினார்கள். மொத்தம் 1 லட்சத்து 36 ஆயிரம் பேர் தேர்வுக்கு பதிவு செய்தனர். ஏ.பி.சி.டி. என்ற கிரேடு முறையில் தேர்ச்சி பெற்றனர். இ கிரேடு பெற்றவர்கள் தோல்வி பட்டியலில் இடம் பெறுவார்கள். ஏ​1, ஏ​2 கிரேடு பெற்றவர்கள் அதிக மதிப்பெண் பெற்றவர்களாக கருதப்படுவார்கள். தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மேற்கண்ட தகவலை சென்னை மண்டல இயக்குனர் (பொறுப்பு) சுந்தரம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்