முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அமெரிக்க விருது

சனிக்கிழமை, 29 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மார்ச் 30 - டெல்லியில் ஆதரவற்ற பெண்களின் முன்னேற்றத்துக்கு உதவி வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டச்சு பெண்ணான நமீதா குரூல் சனேஜாவுக்கு, அமெரிக்காவின் சர்வதேச பெண்கள் கூட்டமைப்பின் சார்பில் விருது வழங்கப்பட்டது.

இதற்கான விழா வாஷிங்டனில் நடைபெற்றது. அதில் டெல்லியில் இயங்கி வரும் ஒர்க்+ஷெல்டர் என்ற பெண்களுக்கான நிறுவனத்தை பாராட்டி அதற்கான விருதை, அந்த நிறுவனத்தின் துணை நிறுவனரான நமீதா குரூல் தனேஜாவிடம் டிஐ ஏடபிள்யூ அமைப்பின் தலைவர் நிஸா கைஸர் ஹிக்கே வழங்கினார்.

இந்த விருதை பெற்ற நமீதா குரூல் தனேஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், பெண்களின் வளர்ச்சிக்கு பாடுபடுபவர்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது, என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்