முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்தில் பிரதமர் விலகக் கோரி எதிர்க் கட்சியினர் பேரணி

ஞாயிற்றுக்கிழமை, 30 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

பாங்காங், மார்ச் 31 - தாய்லாந்தில் பிரதமர்  யிங்லக் லக்க்ஷின வத்ரா பதவி விலகக் கோரி தலைநகர்  பாங்காங்கில் எதிர்க்கட்சியினர் பேரணி  நடத்தினர். இந்தப் பேரணியில் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் யிங்லக் லக்க்ஷின வத்ரா கவனக் குறைவாக நடந்துகொண்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு காரணமாக அவரது அரசியல் வாழ்க்கைக்கு தடை விதிக்க வாய்ப்பு  உள்ளதாகவும் கூறப்படுகிறது. தாய்லாந்து பாராளுமன்றத்தின் மேலவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் பிரதமர்  யிங்லக் லக்க்ஷின வத்ராவின்  தலை விதியை நிர்ணயிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தற்காலிக அரசை நிறுவி பாராளுமன்ற மேலவை தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ஊழலுக்கு எதிரான நடைமுறைகளில் முன் கூட்டியே சீர்திருத்தம் கொண்டுவர வலியுறுத்தியும், எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக் கானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்