முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேடப்படும் குற்றவாளியாக முஷாரப் அறிவிப்பு

புதன்கிழமை, 1 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,ஜூன்.1 - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தேடப்படும் குற்றவாளி என்று அந்நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்னாள் அதிபர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007 ம் ஆண்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை அதிகாரிகளுக்கு எவ்வித ஒத்துழைப்பும் கொடுக்காததால் அவர் ஒரு பயங்கரவாதி என்றும் நீதிபதி ராணா நிசார் குறிப்பிட்டுள்ளார். பெடரல் புலனாய்வு அமைப்பின் கோரிக்கையை ஏற்று நீதிபதி இவ்வாறு தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். 

பெனாசிர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை பாதுகாப்பு காரணங்களுக்காக அடியாலா சிறையில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின் போது ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை. இதன் காரணமாக முஷாரப் தலைமறைவு குற்றவாளி என கடந்த பிப்ரவரி மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

முஷாரப் ஒத்துழைப்பு அளிக்காததால் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 5 பேர் மீதான வழக்கு விசாரணை பல மாதங்களாக நடைபெறவில்லை. இந்நிலையில் அல்பின்டி நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது பிப்ரவரியில் நீதிபதி அளித்த உத்தரவு நகலை முஷாரப்பிடம் வழங்க முடியவில்லை. கடந்த 2009 ம் ஆண்டு முதல் அவர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அந்நாட்டு அரசும் உதவி செய்ய முன்வராததால் உத்தரவு நகலை அவரிடம் அளிக்க இயலவில்லை என்று வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் முறையிட்டனர். 

மேலும் சமீபத்தில் வெளிநாட்டு தொலைக்காட்சிகளுக்கு அவர் அளித்த பேட்டிகளின் மூலம் இந்த வழக்கு தொடர்பாக அவர் நன்கு அறிந்து வைத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது என்றும் வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர். இதை கேட்ட நீதிபதி முஷாரப் ஒரு தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கும் வகையில் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யவும், அவரது சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago