முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் இன்று முதல் ரேசன் கடைகளிலும் இலவச அரிசி

புதன்கிழமை, 1 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜூன்.1 - இன்று முதல் அனைத்து ரேசன் கடைகளிலும் இலவசஅரிசி கிடைக்கும் என மாவட்ட கலெக்டர் சகாயம் தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது; முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைப்படி இன்று முதல் தொடர்ந்து தகுதியுள்ள அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் அரிசி இலவசமாக வழங்கப்படஉள்ளது. நியாயவிலை அங்காடிகளில் பதியப்பட்டுள்ள குடும்ப அட்டைகளுக்கு தேவையான 100 சதவீத அரிசி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் அவர்களது குடும்ப அட்டைக்கு தகுதியான அளவு அரிசி இலவசமாக வழங்கப்படும். எனவே குடும்ப அட்டைதாரர்கள் எந்தவித பதட்டமுமின்றி நியாயவிலை அங்காடிகளுக்கு சென்று அவர்களது குடும்ப அட்டைக்கு தகுதியான அளவு அரிசியை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். 

நியாயவிலைக்கடைகளிலிருந்து அரிசி கடத்துவது மற்றும் பதுக்கிவைத்தல் குறித்து தகவல் ஏதும் தெரியவந்தால் பொதுமக்கள் இதுகுறித்து மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட விநியோக அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், பொது விநியோகத்திட்ட துணை பதிவாளர் மற்றும் குடிமைப்பொருள் வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் ஆகியோருக்கு உரிய காலத்தில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில் தகவல் கொடுத்த நபருக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்றும், தகவல் அளிப்பவர் பற்றிய விபரங்கள் ரகசியம்காக்கப்படும் இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்