முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவிகள் மறைவு - ஜெயலலிதா இரங்கல்

புதன்கிழமை, 1 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.2 - மாணவிகள் மீனா, விமலா ஆகியோரது மறைவிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் விடுத்துள்ளார்.இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி மாவட்ட பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள இராஜாஜி நீச்சல் குளத்தில் 31.5.2011 அன்று நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது, தர்மபுரி மாவட்டம் வி.ஜெட்டிஹள்ளி, இளங்கோ நகரைச் சேர்ந்த திருப்பதி என்பவரின் மகள் செல்வி மீனா மற்றும் மாது என்பவரின் மகள் செல்வி விமலா ஆகிய இரு மாணவிகள் தண்ணீரில் மூழ்கி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயருற்றேன்.

சிறுமிகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும, அனுதாபத்தையும் தெரிவித்துக்கொல்கிறேன். மேலும், இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் (முதலமைச்சர் ஜெயலலிதா) ஆணையிட்டுள்ளேன்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago