முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடன் கொலை குறித்து விசாரணை கமிஷன்

வியாழக்கிழமை, 2 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், ஜூன்.2 -  பாகிஸ்தானிடம் தெரிவிக்காமல் அமெரிக்க ராணுவம் நாட்டிற்குள் தன்னிச்சையாக நுழைந்து பின்லேடனை கொலைசெய்தது அந்நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்பதால் இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் அரசு விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. பாகிஸ்தான் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த அல்கொய்தா இயக்க தலைவர் பின்லேடனை அமெரிக்க படையினர் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானிடம் தெரிவிக்காமல் அமெரிக்க ராணுவம் தன்னிச்சையாக புகுந்து தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானின் இறையான்மைக்கும், தனித்தன்மைக்கும் எதிரானது என்று கூறப்பட்டுவருகிறது. இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்க பாகிஸ்தான் அரசு 5பேர் கொண்ட ஒரு விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. பின்லேடன் கொலை குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள இந்த விசாரணைக்குழுவின் தலைவராக சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி ஜாவீத் இக்பால் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை பாகிஸ்தான் பிரமர் யூசுப் ரசாகிலானி பிறப்பித்துள்ளார்.  இந்த குழுவில் சுப்ரீம் கோர்ட்டு முன்னால் நீதிபதி பக்ருதீன் இப்ராகிம், ஒய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் நதீம் அகமது, முன்னாள் போலீஸ் அதிகாரி அப்பாஸ்கான், வெளிநாட்டு முன்னாள் தூதர் அரப் ஜகாங்கீர் ஆகியோர் அடங்குவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்