முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லலித் மோடி வீட்டில் சம்மனை ஒட்ட தனி போலீஸ் அதிகாரி

வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, பிப்.25 - ஐபிஎஸ் ஊழல்  புகார் சம்பந்தமாக லலித்மோடி வீட்டில் நேரடியாக சம்மனை ஒட்ட தனி அதிகாரி மும்பைக்கு செல்லவிருப்பதாக கமிஷனர் ராஜேந்திரன் கூறினார். சென்னையில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் துறைமுக அதிகாரிகள் காவல் துறை உயரதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இதில் காவல்துறை சார்பில் கமிஷனர் ராஜேந்திரன் கூடுதல் ஆணையர்கள் சகீல் அக்தர், சஞ்சய் அரோரா, போக்குவரத்து கூடுதல் ஆணையர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கண்டெய்னர் லாரிகளினால் வடசென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பது சம்மந்தமாக பேசப்பட்டது. கூட்ட முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய கமிஷனர் ராஜேந்திரன் கண்டெய்னர்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த கூட்டத்தில் பேசப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான கண்டெய்னர் லாரிகள் வடசென்னை வழியாக வருகின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அதை கருத்தில் கொண்டு எண்ணூரில் கண்டெய்னர் லாரிகள் நிறுத்துவதற்கு 11 கிரவுண்டில் இடம் ஒதுக்க உள்ளோம். அதேபோல் துறை  முகத்தின் உள்ளே 5 கிரவுண்ட் நிலம் காலி செய்து கண்டெய்னர்  நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் கண்டெய்னர் தேங்கி நிற்ப்பது குறையும் என்றார்.
மேலும் ஐபில் கிரிக்கெட் மோசடி விவகாரத்தில் சம்மனை தபால் மூலம் அனுப்பி லலித்மோடி பெறாததால் இனி லலித்மோடி இல்லத்திலேயே சம்மனை கொண்டு ஒட்டுவதற்கு தனி அதிகாரி மும்பை செல்லவிருப்பதாக கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்