முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்களின் தரம் உயர பாடுபடவேண்டும் - அமைச்சர் ஜெயபால்

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.3 - மீன்வளத்துறை அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் நேற்று அமைச்சர் மீன்வளத்துறை கே.ஏ.ஜெயபால் தலைமையில் நடைபெற்றது.மீன்வளத்துறை அமைசசர் கே.ஏ.ஜெயபால் தலைமையில் நேற்று சென்னையில் மீன்வளத்துறை அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மீனவ மக்களுக்காக தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், மத்திய அரசின் நிதி உதவியோடு செயல்படுத்தப்படும் திட்டங்கள், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் அத்திட்டங்களின் பயன்கள் மீனவ மக்களுக்கு சென்றடைந்த விதம் குறித்து ஆய்வு செய்தார். அக்கூட்டத்தில் மீன்வளத்துறை அமைச்சர் பேசியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மீனவ மக்கள் மீது கொண்டுள்ள அளவிலா பற்றின் காரணமாக ஆட்சி பொறுப்பேற்ற அன்றே மீன்பிடித் தடைக்கால உதவி தொகையினை ரூ.2000-ஆக உயர்த்தி வழங்க ஆணையிட்டார்கள். மேலும் மீனவ மக்களின் வாழ்க்கை தரம் உயர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்கள்.

மீன்வளத்துறை அலுவலர்களான, நீங்கள் அரசு திட்டங்களின் பயன்கள் உரிய மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். அதே போல மீனவ மக்களின் வருமானத்தைப் பெருக்கி வாழ்வை வளப்படுத்தும் வகையில் நான் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும். கடல்வள மீனவர்களைப் போல உள்நாட்டு மீனவர்களின் வாழ்க்கைத் தரமும் உயர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அரசு செயலர் ககன்தீப் சிங் பேடி, மீன் வளத்துறை ஆணையர் கே.செல்லமுத்து உள்ளிட்ட மீன்வளத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago