முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் தென்னரசு வெற்றியை எதிர்த்து வழக்கு - மூ.மு.க முடிவு

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன். 3​- அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக செயற்குழு கூட்டம் சென்னை தி.நகரில் நடந்தது. கூட்டத்துக்கு நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ச.இசக்கிமுத்து, பொருளாளர் கழுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர்கள் 189 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:​

தமிழக முதல்​அமைச்சராக 3​வது முறையாக பொறுப்பெற்றுள்ள ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன், அ.தி.மு.க. ஆட்சி அமைய வாக்களித்த தமிழக மக்களுக்கு மூவேந்தர் முன்னணி கழகம் நன்றி தெரிவிக்கிறது.

திருச்சுழி சட்டசபை தொகுதியில் அரசு அதிகாரம், பணபலம் காவல் துறை உதவியுடன் பல்வேறு அதிகார துஷ்பிரயோகம் செய்து தி.மு.க. வேட்பாளர் தங்கம் தென்னரசு வெற்றி பெற்றதாக செயற்குழு கருதுகிறது. இதனால் தங்கம் தென்னரசு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி கோர்ட்டில் வழக்கு தொடர செயற்குழு முடிவு செய்கிறது.

தங்கம் தென்னரசுக்கு ஆதரவாக தேர்தல் பணி செய்த காவல்துறை அதிகாரிகள் மீதும், வாக்காளர்களுக்கு பணம் எடுத்துச் சென்ற கல்வி அதிகாரி, அரசு ஆசிரியர்கள் மீதும் இலாகா nullர்வ நடவடிக்கை எடுக்குமாறு முதல்​ அமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

திருச்சுழி தொகுதியில் போட்டியிட்ட கட்சியின் பொதுச் செயலாளர் இசக்கிமுத்துக்கு பண பலத்தை மீறி வாக்களித்த 61 ஆயிரம் வாக்காளர்களுக்கு செயற்குழு நன்றி தெரிவிக்கிறது. மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு சமச்சீர் கல்வியை தற்காலிகமாக நிறுத்தி வைத்த அ.தி.மு.க. அரசுக்கு நன்றி தெரிவிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்