முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் ஊழல்: லண்டன் தொழிலதிபர் ஒத்துழைக்க மறுப்பு

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,ஜூன்.3 - டெல்லியில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் விழா ஏற்பாடுகளில் ரூ. 70 ஆயிரம் கோடி செலவுகளில் ரூ. 10 ஆயிரம் கோடி வரை முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அது சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. போட்டி ஒருங்கிணைப்பாளர் உட்பட முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். 

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக கடந்த 2009 ம் ஆண்டு லண்டனில் நடந்த குயின்ஸ் பேட்டன் தொடக்க ஓட்டத்தின் போது போட்டி அழைப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களை அழைத்து செல்ல கார்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டன. நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப கூட சாதனங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. இந்த பணிகளை லண்டனை சேர்ந்த ஏ.எம். பிலிம்ஸ் மற்றும் ஏ.எம். கார் மற்றும் வேன் வாடகை நிறுவனம் செய்தது. இதற்காக இந்நிறுவனத்திற்கு சுரேஷ் கல்மாடி ஒப்புதலின் பேரில் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டது. 

பணம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக விசாரணை நடந்து வருகிறது. அந்த நிறுவனங்களின் உரிமையாளர் அசீஸ் பட்டேலிடம் விசாரணை நடத்த கடந்த மாதம் சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றுள்ளனர். இந்த வழக்கில் படேல் அளிக்கும் சாட்சியம் முக்கியமாக எடுத்து கொள்ளப்படவிருக்கிறது. அவர்தான் வழக்கின் முக்கிய ஆதாரம் என்று கூறப்பட்ட நிலையில் முதலில் அவர் விசாரணை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறி வந்தார். அது நம்பிக்கையாக இருந்தது. 

ஆனால் தற்போது அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். விவரங்களை அளிக்க முன்வரவில்லை. அவர் ஒத்துழைக்காதது வழக்கில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்