முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர்

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

தென்காசி. ஜூன். 3 - ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் கடந்த 2 நாட்களாக குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் அடித்து வருவதால் குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலஅருவி, புலி அருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, பழத்தோட்ட அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழத்துவங்கியுள்ளது.

குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் காலமாகும். இந்த காலங்களில் சீசனை அனுபவிக்க தமிழகம் முழுவதும் மட்டும் அல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் உல்லாசப் பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தருவார்கள். குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலி அருவி, செண்பகாதேவி அருவி, பழத்தோட்ட அருவி, தேனருவி, குண்டர் தோப்பு அருவி, உட்பட பல்வேறு அருவிகள் உள்ளது. இந்த அருவிகளில் குளிப்பதற்கு மட்டுமல்லாமல், சீசன் காலங்களில் குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் அடிப்பதும், லேசான வெயில் அவ்வப்போது கண்ணாமூச்சி காட்டுவதும் குற்றாலத்தின் சிறப்பு அம்சமாகும். இதனை அனுபவிக்க உலகம் முழுவதும் உள்ள உல்லாச பயணிகள் குற்றாலத்திற்கு வருவது வாடிக்கை. 

இந்த ஆண்டு கடந்த சிலமாதங்களாக தமிழகம் முழுவதும் வெயில் கடுமையாக இருந்தது. மேலும் 

கடந்த 1 மாதகாலமாக அனைத்து பகுதிகளிலும் கத்தரி வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் குற்றாலம் பகுதிகளில் மட்டும் கத்திரி வெயிலின் மக்களுக்கு தெரியாத வகையில் நல்ல குளிர்ந்த காற்று இதமாக வீசியது. இதனால் குற்றாலம், தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் கடந்த ஒரு மாதகாலமாக வெயிலின் தாக்கம் இல்லை. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சீசன் துவங்கும் அறிகுறி தென்படும் வகையில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பெய்தது. இந்நிலையில் நேற்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் லேசாக தண்ணீர் விழத்துவங்கியது.  அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முழுவதும் பலத்த மழை பெய்ததால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழத்துவங்கியுல்ளது. இதை அறிந்த பொது மக்கள் மற்றும் உல்லாசப் பயணிகள் மிகவும் ஆர்வத்துடன் உற்சாகமாக ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் குற்றாலத்தில் சீசன் துவங்கும் அறிகுறி தென்படத்துவங்கியுள்ளது. இதனால் குற்றாலம் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் விழத்துவங்கியுள்ளது. அதனை தொடர்ந்து சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் குற்றாலத்தில் தொடர்ந்து  சீசன் களைகட்ட தொடங்கிவிடும் என  தெரிகிறது.  மேலும் தமிழக அரசு பள்ளிகள் மேலும் 15 நாட்கள் கழித்து திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளதால் தமிழகம் முழுவதும் உல்லாசப் பயணிகள் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் எப்போது விழும் என ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்