முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீன்பிடி தடைக்கால நிவாரண உதவித் தொகை: அமைச்சர் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

நாகர்கோவில்,ஜூன்.3 - குமரி மாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண உதவித் தொகையை வனத்துறை அமைச்சர் பச்சைமால் வழங்கினார். தமிழக கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் பழவேர்காடு வரை மீன் இனப்பெருக்கம் மற்றும் மீன்வளத்துறை பாதுகாப்பதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15 ம் தேதி முதல் மே மாதம் 3 ம் தேதி வரை மேற்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி, கோவளம் முதல் நீரோடி வரை ஜூன் மாதம் 15 ம் தேதி முதல் ஜூலை மாதம் 31 ம் தேதி வரையும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. ஜெயலலிதா பொறுப்பேற்ற அன்று நிவாரண உதவித் தொகையை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தினார். இந்த திட்டத்தை சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் 28 ஆயிரத்து 500 மீனவர்கள் குமரி மாவட்டத்தில் பயனடைகின்றனர். அவர்களுக்கு தலா ரூபாய் 2 ஆயிரம் வீதம் ரூ. 5 கோடியே 70 லட்சம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. 

இந்த உதவித் தொகை வழங்கும் விழா கன்னியாகுமரி சமூக நலக்கூடத்தில் நடைபெற்றது. இதற்கு குமரி மாவட்ட கலெக்டர் தலைமை வகித்தார். நாகர்கோவில் மின்துறை உதவி இயக்குனர் கடல் வளம் ரூபஜோதி வரவேற்று பேசினார். இதில் வனத்துறை அமைச்சர் பச்சைமால் கலந்து கொண்டு உதவித் தொகையை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது, 

முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி பதவி ஏற்றதும் 7 நலத்திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். அந்த திட்டத்தில் மீன்பிடி தடைக்கால உதவித் தொகையை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி ஆணையிட்டுள்ளார். அதன்படி நிவாரண உதவித் தொகை வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ, கன்னியாகுமரி பங்கு தந்தை லயோன் சென்சன், கன்னியாகுமரி பேரூராட்சி மன்ற தலைவர் கோல்பி எழிலன், துணைத் தலைவர் வின்ஸ்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்