முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கறுப்புப்பணத்தை ஒழிக்க ராம்தேவ் ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி,மே.3 - நாட்டில் கறுப்புப்பணத்தை ஒழிக்க போராட்ட யுக்தியை இறுதி செய்வது குறித்து தனது சகாக்களுடன் பாபா ராம்தேவ் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார். 

நாட்டில் எங்கு பார்த்தாலும் ஊழல், கறுப்புப்பணம் பதுக்கல் நடக்கிறது. இதை எதிர்த்து போராட சமூக ஆர்வலர்கள் முழுமூச்சுடன் இறங்க ஆரம்பித்துவிட்டனர். ஊழலை ஒழிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சமூக சேவகர் அண்ணா ஹஸரே டெல்லியில் உண்ணாவிரதத்தை தொடங்கினார். இதனையொட்டி லோக்பால் ஆலோசனை கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தநிலையில் நாட்டில் கறுப்புப்பணத்தை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி பாபா ராம்தேவ் நாளை முதல் உண்ணாவிரதம் இருக்க உள்ளார். இந்த உண்ணாவிரத போராட்டத்தை திறம்பட நடத்துவது குறித்து பாபா ராம்தேவ் நேற்று டெல்லியில் தனது சகாக்கள், நண்பர்கள், நெருக்கமானவர்கள் ஆகியோர்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் பாபா ராம்தேவுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. அதுகுறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார். மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜயன் நகரில் இருந்து ஜெட் விமானம் மூலம் புதுடெல்லி வந்த ராம்தேவ், மத்திய அரசுடன் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தையின்போது கையாள வேண்டிய அணுகுமுறை குறித்தும் தனது சகாக்களுடன் ராம்தேவ் ஆலோசனை நடத்தினார். ராம்தேவை சமாதானப்படுத்துவதற்காக டெல்லி விமான நிலையத்திற்கு மத்திய அமைச்சர்கள் 4 பேர் வந்து வரவேற்றனர். ஆனால் திட்டமிட்டபடி நாளை உண்ணாவிரதத்தை தொடங்குவேன் என்று ராம்தேவ் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago