முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாபா ராம்தேவை தாக்குவதா? பா.ஜ. கண்டனம்

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

லக்னோ,மே.3 - ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ள பிரபல சமூக சேவகர் யோகா குரு பாபா ராம்தேவை காங்கிரசார் தாக்கி பேசியிருப்பதற்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஊழலை ஒழிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி அண்ணா ஹஸரே டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். இதையொட்டி லோக்பால் கமிட்டியை மத்திய அமைத்துள்ளது. இந்த நிலையில் ஊழலை ஒழிக்க பாபா ராம்தேவ் நாளை முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். இதனையொட்டி அவரை மத்திய அமைச்சர்கள் சமாதானம் செய்து வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு சில தலைவர்கள்,ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்க ராம்தேவுக்கு அருகதை இல்லை. அவர் ஒரு லாப நோக்குள்ள வர்த்தகர் என்று கடுமையாக தாக்கி உள்ளனர். இதற்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ராம்தேவை மத்திய அமைச்சர்கள் ஒரு சிலர் சேர்ந்து சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மறுபக்கம் ஆட்சிக்கு பாதுகாப்பாக இருக்கும் காங்கிரஸ்காரர்கள் சிலர், ராம்தேவை தாக்கி பேசியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது என்று கட்சியின் தேசிய துணைத்தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி நேற்று லக்னோவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ஊழலை எதிர்த்து யார் போராடினாலும் கட்சி வேறுபாடின்றி அவர்களுக்கு பாரதிய ஜனதா ஆதரவு கொடுக்கும் என்றார். இன்று தொடங்கும் தேசிய நிர்வாகக்குழுக்கூட்டத்தில் பணவீக்கம், ஊழல், கறுப்புப்பணம் ஆகிய பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் நக்வி மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்