முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய தலைமை செயலக பணி குறித்து விசாரிக்க விசாரணைக்குழு

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூன் 4 - புதிய தலைமை செயலக கட்டுமான பணிகளில் பயனற்ற செலவு, காலதாமதம் குறித்து விசாரணைக்குழு அமைக்கப்படும் என்று கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.நேற்று சட்டசபையில் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா தமது உரையில்:-​

இம்மாநிலத்தில் சட்ட மேலவை ஒரு தேவையற்ற அமைப்பாகக் கருதப்பட்டதால் 1.11.1986 அன்று எம்.ஜி.ஆரால் கலைக்கப்பட்டது. எனவே, மீண்டும் சட்ட மேலவையைக் கொண்டுவரத் தேவையில்லை என இந்த அரசு கருதுகிறது. சட்டப் பேரவையில் இப்பொருள் குறித்து விவாதிக்கப்பட்டு ஒரு இறுதி முடிவு எடுக்கப்படும். ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற தலைமைச் செயலகக் கட்டடம் முழுமையாக கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பே மார்ச் 2010-ல் திறந்து வைக்கப்பட்டது. அந்தப் புதிய கட்டடத்தில் போதிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. அடிப்படை வசதிகள் கூட அங்கு இல்லை. கட்டுமானப் பணிகள் முழுமை பெறுவதற்கு முன்பே அவசர அவசரமாக ஒரு சில துறைகளும், முதலமைச்சர் மற்றும் அனைத்து அமைச்சர்களின் அலுவலகங்களும் அந்தப் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டன. ஆறு செயலகத் துறைகள் மட்டுமே புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் மீதமுள்ள 29 துறைகள் புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள பழைய கட்டடத்திலேயே இயங்கி வந்தன. அமைச்சர்களின் அலுவலகங்கள் மட்டும் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், தொடர்புடைய துறை அலுவலகங்கள் தொடர்ந்து புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள பழைய தலைமைச் செயலகக் கட்டடத்திலேயே செயல்பட்டு வந்தன. இவ்வாறு துறைகளை ஒரு இடத்திலும், அமைச்சர்களின் அலுவலகங்கள் மற்றும் ஒரு சில துறைகளை மட்டும் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்திற்கு மாற்றியது தேவையற்ற நிர்வாகப் பிரச்சினைகளை ஏற்படுத்தியதுடன் பொதுமக்களுக்கும் இடையூறாக அமைந்துள்ளதால், இந்த அரசு புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலகக் கட்டடத்திலேயே தனது நிர்வாகப் பணிகளைத் தொடர முடிவு செய்துள்ளது. புதிய தலைமைச் செயலகக் கட்டடப் பணிகளுக்கு கூடுதலான மற்றும் பயனற்ற செலவு, கால தாமதம், தரமற்ற கட்டுமானப் பணிகள் போன்ற குறைபாடுகள் உள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த விசாரணை முறையாக நடைபெற ஏதுவாக புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago