முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்சு ஓபன் இறுதி போட்டியில் பிரான்செஸ்கா-நா லீ மோதல்

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

பாரிஸ், ஜூன். 4 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் பட்டத்தைக் கைப்பற்ற இத்தாலி வீராங்கனை பிரான் செஸ் காவும், சீன வீராங்கனை நா லீயும் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றனர். 

சீன வீராங்கனையான நா லீ முதன் முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி அந்நாட்டிற்கு பெருமை சேர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த வருடத்தின் 2 -வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் கடந்த 2 வாரகாலமாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி தற் போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீர ர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதித்தனர். கிராண்ட் ஸ்லாம் போட்டியான இது இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். 

மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் அரை இறுதிச் சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் பிரான்ஸ் வீராங்கனை மரியான் பர்ட்டோலியும், இத் தாலி வீராங்கனை பிரான்செஸ்காவும் மோதினர். 

2 செட் கொண்ட இந்த ஆட்டத்தின் முடிவில் இத்தாலி வீராங்கனை பிரான்செஸ்கா அபாரமாக ஆடி எளிதான வெற்றியைப் பெற்றார். அவர் 6 - 3, 6 - 3 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீராங்கனையை தோற்கடித்தார். 

மற்றொரு அரை இறுதிச் சுற்று ஒன்றில், ரஷ்ய முன்னணி வீராங்கனையான மரியா ஷரபோவாவும், சீன வீராங்கனை நா லீயும் மோதினர். மரியா விம்பிள்டன் முன்னாள் சாம்பியனாவார். 

இந்தப் போட்டியில் அனுபவமிக்க ரஷ்ய வீராங்கனை ஷரபோவா வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீன வீராங்க னை வெகு நேர்த்தியாக ஆடி 6 - 4, 7 - 5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதன் முறையாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். 

இதன் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியா வைச் சேர்ந்த ஹசே டெல்லக்குவா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்காட் லிப்ஸ்கி ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப் பற்றி சாதனை படைத்தது. 

ஆடவர் இரட்டையர் பிரிவின் அரை இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் பாப் பிரையான் மற்றும் மைக் பிரையான் ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது. 

ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரை இறுதிச் சுற்றுக்கு உலக நம்பர் - 1 வீரரான ரேபல் நடால், நம்பர் - 2 வீரரான டிஜோகோவிக், நம்பர் - 3 வீரரான ரோஜர் பெடரர் மற்றும் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே ஆகியோர் முன்னேறி உள்ளனர். 

மகளிருக்கான இரட்டையர் பிரிவின் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் ரஷ்யாவின் எலீனா வெஸ்னினா ஜோடி முன் னேறி உள்ளது. இதில் சானியா வெற்றி பெற்றால் சாதனை படைப் பார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago